பாகிஸ்தான் பள்ளி கட்டிடம் இடிந்து விபத்து: 28 மாணவர்கள் பரிதாப பலி, 40 பேர் படுகாயம்
செய்தி முன்னோட்டம்
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள அப்ரிடி அபாத் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியின் கூரை திடீரென இடிந்து விழுந்த விபத்தில், 7 முதல் 12 வயதுக்குட்பட்ட 28 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியை உள்பட பலர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களில் 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக லேடி ரீடிங் மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 'அல் கைர்' என்ற பெயரிடப்பட்ட தனியார் பள்ளியில் வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நேரிட்டுள்ளது. இந்த விபத்து குறித்து கைபர் பக்துன்க்வா ஆளுநர் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
A tragic incident in Peshawar, where at least 16 students and teachers have died after the roof of a private school collapsed.
— Sajjad Tarakzai (@SajjadTarakzai) October 15, 2026
Our thoughts are with the victims and their grieving families
Rescue operations are ongoing#Peshawar #BreakingNews #Pakistan #SchoolCollapse pic.twitter.com/h5kCPW26nt