LOADING...
ஈரான் போருக்காக 200 பில்லியன் டாலர் கூடுதல் நிதி கோருகிறது பென்டகன்
200 பில்லியன் டாலர் கூடுதல் நிதி கோருகிறது பென்டகன்

ஈரான் போருக்காக 200 பில்லியன் டாலர் கூடுதல் நிதி கோருகிறது பென்டகன்

எழுதியவர் Venkatalakshmi V
Mar 19, 2026
09:00 am

செய்தி முன்னோட்டம்

ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைகள் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் சூழலைச் சமாளிக்க, அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சகம்- பென்டகன், 200 பில்லியன் டாலர் மதிப்பிலான கூடுதல் வரவுசெலவுத் திட்டத்தை தாக்கல் செய்துள்ளது. இது குறித்து தி வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ள செய்தியில், போரின் வீச்சு அதிகரித்து வருவதைத் தொடர்ந்து இந்த நிதி கோரப்பட்டுள்ளது. அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம், "எங்களுக்கு யாருடைய உதவியும் தேவையில்லை, தனியாகவே ஈரானை எதிர்கொள்ளத் தயார்" என்று அறிவித்திருந்த நிலையில், இந்த மிகப்பெரிய நிதி ஒதுக்கீடு கோரிக்கை அமெரிக்க நாடாளுமன்றத்தில் விவாதத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. நேட்டோ நாடுகளின் பங்களிப்பு குறைந்திருப்பதால், ஒட்டுமொத்தப் போர் செலவையும் அமெரிக்காவே ஏற்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

நோக்கம்

நிதி ஒதுக்கீட்டின் நோக்கம்

பென்டகன் சமர்ப்பித்துள்ள இந்த நிதி ஒதுக்கீடு கோரிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள்: ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள்: அதிநவீன ஏவுகணைகள், 'பங்கர்-பஸ்டர்' ரகக் குண்டுகள் மற்றும் ட்ரோன் தொழில்நுட்பங்களை மேம்படுத்த இந்த நிதி பயன்படுத்தப்படும். கூடுதல் படைப் பலம்: மத்திய கிழக்கில் ஏற்கனவே நிலைநிறுத்தப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான வீரர்களின் பராமரிப்பு மற்றும் புதிய வீரர்களை பணியில் அமர்த்துவதற்கான செலவுகள் இதில் அடங்கும். எரிசக்திப் பாதுகாப்பு: ஹார்முஸ் ஜலசந்தி உள்ளிட்ட முக்கிய கடல் வழித்தடங்களில் அமெரிக்க மற்றும் கூட்டணி நாடுகளின் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கூடுதல் போர்க்கப்பல்களை இயக்க இந்த நிதி அவசியம் எனக் கூறப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு போரினால் இந்த அதிரடி ராணுவச் செலவு அந்நாட்டின் உள்நாட்டுப் பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என வல்லுநர்கள் கருதுகின்றனர்.

Advertisement