Page Loader
பயங்கரவாதி பன்னூன் கொலை சதி திட்ட வழக்கு: நிகில் குப்தாவின் வழக்கறிஞர்களுக்கு ஆதாரத்தை வழங்க அமெரிக்கா எதிர்ப்பு

பயங்கரவாதி பன்னூன் கொலை சதி திட்ட வழக்கு: நிகில் குப்தாவின் வழக்கறிஞர்களுக்கு ஆதாரத்தை வழங்க அமெரிக்கா எதிர்ப்பு

எழுதியவர் Sindhuja SM
Jan 11, 2024
12:26 pm

செய்தி முன்னோட்டம்

பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னூனை கொலை செய்ய சதி திட்டம் தீட்டிய வழக்கில் நிகில் குப்தாவின் வழக்கறிஞரிடம் ஆதாரங்களை வழங்குவதற்கு அமெரிக்க அரசாங்கம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னூனை கொலை செய்ய சதி திட்டம் தீட்டிய வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நிகில் குப்தா ஒரு இந்திய அரசாங்க அதிகாரி ஆவார். நிகில் குப்தாவுக்கு எதிரான ஆதாரங்களை அவரது வழக்கறிஞர்களிடம் கொடுப்பதற்கு அமெரிக்க அரசாங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதற்காக ஒரு கடிதத்தை நீதிமன்றத்தில் சமர்பித்திருக்கும் அமெரிக்க அரசு, "செக் குடியரசில் அவரை ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் நிலுவையில் உள்ள நிலையில், ​​​​நிகில் குப்தாவுக்கு எதிரான ஆதாரங்களை கோரி அவர் சமர்பித்திருக்கும் பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவிக்க அரசாங்கம் இந்த கடிதத்தை மரியாதையுடன் சமர்ப்பிக்கிறது" என்று கூறியுள்ளது.

டக்லவா

நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில்  பதிலளித்த அமெரிக்க அரசாங்கம்

நிகில் குப்தாவுக்கு எதிரான ஆதாரங்களை தங்களிடம் பகிர்ந்து கொள்ள அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி குப்தாவின் வழக்கறிஞர் ஜனவரி 4ஆம் தேதி, நியூயார்க்கின் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தனர். அந்த மனுவை ஜனவரி 8ஆம் தேதி விசாரித்த அமெரிக்க மாவட்ட நீதிபதி விக்டர் மரேரோ, குப்தாவின் வழக்கறிஞர் தாக்கல் செய்த மனுவுக்குப் பதிலளிக்க அரசாங்கத்திற்கு மூன்று நாட்கள் அவகாசம் வழங்கினார். இந்நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவுப்படி பதிலளித்திருக்கும் அமெரிக்க அரசாங்கம், செக் குடியரசில் அவரை ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் நிலுவையில் உள்ளதால் குப்தாவுக்கு எதிரான ஆதாரங்களை பகிர்ந்து கொள்ள முடியாது என்று கூறி குப்தாவின் மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த வழக்கு குறித்த மேலும் தகவலை இங்கு காணலாம்.