Loading...
FATF அமைப்பை ஏமாற்ற பாகிஸ்தானின் புதிய சதி! மசூத் அசார் தலைக்கு ரூ.70 லட்சம் பரிசு அறிவிப்பு
சூத் அசார் தலைக்கு ரூ.70 லட்சம் பரிசு அறிவிப்பு

FATF அமைப்பை ஏமாற்ற பாகிஸ்தானின் புதிய சதி! மசூத் அசார் தலைக்கு ரூ.70 லட்சம் பரிசு அறிவிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Sep 14, 2026
06:37 pm

செய்தி முன்னோட்டம்

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாரை பிடித்துத் தருபவர்களுக்கான பரிசை 70 லட்சம் பாகிஸ்தான் ரூபாயாக அந்நாட்டின் கூட்டாட்சி விசாரணை முகமை உயர்த்தியுள்ளது. அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள நிதி நடவடிக்கை பணிக்குழுவின் (FATF) கூட்டத்தில், பாகிஸ்தான் மீண்டும் கிரே லிஸ்ட்டில் சேர்க்கப்படுவதைத் தவிர்க்கவே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. முன்னதாக மசூத் அசாருக்கு ரூ.50 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ரூ.20 லட்சம் உயர்த்தப்பட்டுள்ளது.

சிந்துவில் முகாமிட்ட பயங்கரவாதி

ஆஃப்கானிஸ்தானில் பதுங்கல் எனப் பொய்

2021 ஆம் ஆண்டு முதல் மசூத் அசார் பாகிஸ்தானில் இல்லை என்றும், அவர் ஆப்கானிஸ்தானில் பதுங்கியிருப்பதாகவும் பாகிஸ்தான் தொடர்ந்து சர்வதேச சமூகத்திடம் பொய் கூறி வருகிறது.

ஆனால், இந்திய உளவுத்துறையின் ரகசியத் தொழில்நுட்ப ஆய்வுகளின்படி, மசூத் அசார் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள நவாப்ஷா பகுதியில் பாதுகாப்பாகப் பதுங்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

2019 புல்வாமா தாக்குதல் உட்பட இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இவனே முதன்மை சூத்திரதாரியாவான்.

மும்பை தாக்குதல்

26/11 மும்பை தாக்குதல் பயங்கரவாதிகள் பெயர்கள் சேர்ப்பு மற்றும் மறைப்பு

பாகிஸ்தான் வெளியிட்டுள்ள ரெட் புக் பட்டியலில், 2008 மும்பை 26/11 தாக்குதலுக்கு உதவிய 19 லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

தாக்குதலுக்கு படகுகள் மற்றும் நிதி உதவி வழங்கிய நபர்களின் பெயர்கள் இதில் சேர்க்கப்பட்டிருந்தாலும், முகமது கான் மற்றும் அப்துல் ரஹ்மான் ஆகிய இரு முக்கியப் பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் மற்றும் அமைப்பின் பெயர்களை பாகிஸ்தான் ரகசியமாக நீக்கியுள்ளது.

இதன் மூலம் சர்வதேச ஆய்வுகளில் இருந்து அவர்களைக் காப்பாற்ற பாகிஸ்தான் முயல்கிறது.

ADVERTISEMENT

ஆபரேஷன் சிந்தூர்

ஆபரேஷன் சிந்தூர் மூலம் அழிக்கப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது தலைமையகம்

பாகிஸ்தானின் பஹாவல்பூரில் சுமார் 100 கிமீ தொலைவில் இயங்கி வந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முதன்மைத் தலைமையகமான மர்கஸ் சுபஹானல்லா மையத்தை, இந்திய ஆயுதப்படைகள் ஆபரேஷன் சிந்தூர் மூலம் முற்றிலும் அழித்தன.

2015 முதல் செயல்பட்டு வந்த இந்த மையத்திலிருந்தே மசூத் அசார் மற்றும் அவனது குடும்பத்தினர் பயங்கரவாதப் பயிற்சிகளையும், இந்தியாவுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகளையும் முன்னெடுத்து வந்தனர்.

இந்திய ராணுவத்தின் இந்தத் தாக்குதல் அக் குழுவிற்குப் பலத்த அடியைக் கொடுத்துள்ளது.

ADVERTISEMENT

பாகிஸ்தானின் நாடகம்

சர்வதேசக் கண்களை மறைக்க பாகிஸ்தான் போடும் வேஷம்

கடந்த ஐந்து ஆண்டுகளில் பாகிஸ்தான் வெளியிட்டுள்ள தேடப்படும் குற்றவாளிகளின் எண்ணிக்கை 1,330லிருந்து 1,804 ஆக (35% உயர்வு) அதிகரித்துள்ளது.

18 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருப்பதாகப் பாகிஸ்தான் கூறும் 26/11 பயங்கரவாதிகள் 17 பேரும் அந்நாட்டிலேயே சுதந்திரமாக சுற்றி திரிகின்றனர் என்று இந்திய உளவுத்துறை சாடியுள்ளது.

FATF அமைப்பின் கடுமையான நிதித் தடைகளில் இருந்து தப்பிப்பதற்காகவே பாகிஸ்தான் இத்தகைய போலிப் பட்டியல்களை வெளியிட்டு நாடகமாடி வருவதாக பாதுகாப்பு வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ADVERTISEMENT