நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் துப்பாக்கிச் சூடு: கத்திக்குத்து மற்றும் துப்பாக்கிச் சூட்டினால் அலறியடித்து ஓடிய சுற்றுலாப் பயணிகள்
செய்தி முன்னோட்டம்
உலகின் மிக பரபரப்பான பொது இடங்களில் ஒன்றான நியூயார்க் நகரின் டைம்ஸ் சதுக்கத்தில் வியாழக்கிழமை மதியம் நடத்தப்பட்ட அடுத்தடுத்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள், அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பீதியையும் பரப்பரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் புகழ்பெற்ற 'நியூயார்க் நிக்ஸ்' கூடைப்பந்து அணி, 53 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக என்.பி.ஏ (NBA) சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றதைக் கொண்டாடும் பிரமாண்ட ஊர்வலம் லோயர் மேன்ஹாட்டனில் நடைபெற்றது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வைப் பாதுகாப்பதற்காக சுமார் 10,000 போலீஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்த சூழலில், மதியம் 3:40 மணியளவில் பிராட்வே பகுதியில் உள்ள மேற்கு 44 மற்றும் 45-வது தெருக்களுக்கு இடையே ஒரு பெரிய குழுவிற்குள் திடீரென மோதல் வெடித்தது.
தாக்குதல்
கத்திக்குத்து மற்றும் துப்பாக்கிச் சூடு
இந்த மோதலின் போது, 26 வயதுடைய இளைஞர் ஒருவரின் கழுத்தில் கத்திக்குத்து விழுந்தது. அதனைத் தொடர்ந்து, அங்கு நின்றிருந்த 17 வயது சிறுவன் ஒருவன் அந்த கும்பலை நோக்கித் துப்பாக்கியால் சரமாரியாகச் சுடத் தொடங்கினான். கூட்ட நெரிசல் மிகுந்த சந்திப்பில் இருவர் துப்பாக்கியால் சுடும் காட்சிகள் அங்கிருந்த கேமராக்களில் பதிவாகின. துப்பாக்கி சத்தம் கேட்டவுடன் அதிர்ச்சியடைந்த சுற்றுலாப் பயணிகளும் உள்ளூர் மக்களும் தங்களின் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அலறியடித்துக் கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர். துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்களை நியூயார்க் போலீசார் உடனடியாகத் துரத்திச் சென்றனர். இதில் தொடர்புடைய ஒரு சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடமிருந்து துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
🇺🇸: Shots fired near 42nd Street and Broadway in Times Square, New York City
— World In Last 24hr (@world24x7hr) June 18, 2026
According to NYPD reports and eyewitness accounts, gunfire caused panic with crowds scattering. A suspect was quickly arrested, and a firearm was recovered at the scene. No injuries have been confirmed… pic.twitter.com/3Pbgnybtx1