Loading...
உதவி வேண்டாம் என மறுத்த நேபாள அரசு திடீர் யூ-டர்ன்; இந்தியா, சீனாவின் மீட்புக் குழுக்களுக்கு அனுமதி
உதவி வேண்டாம் என மறுத்த நேபாள அரசு திடீர் யூ-டர்ன்

உதவி வேண்டாம் என மறுத்த நேபாள அரசு திடீர் யூ-டர்ன்; இந்தியா, சீனாவின் மீட்புக் குழுக்களுக்கு அனுமதி

எழுதியவர் Sekar Chinnappan
Aug 29, 2026
08:11 am

செய்தி முன்னோட்டம்

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் பல நாட்டுப் பிரஜைகள் மாயமானதைத் தொடர்ந்து, வெளிநாட்டு மீட்புக் குழுக்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நேபாள அரசு உடனடியாகத் திரும்பப் பெற்றுள்ளது. ஆரம்பத்தில் சர்வதேச நாடுகளின் உதவி தேவையில்லை எனத் தெரிவித்த நேபாளம், தூதரகங்களின் கடும் அழுத்தம் காரணமாகத் தற்போது இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளின் நிபுணர் குழுக்களை அனுமதித்துள்ளது. சுரங்கப் பாதை மீட்பு, டிஎன்ஏ பரிசோதனை மற்றும் தடயவியல் ஆய்வுகளுக்கு மட்டும் இந்த அமைப்புகள் அனுமதிக்கப்படும்.

பலி எண்ணிக்கை

550க்கும் மேற்பட்டோர் பலி; 1,900 பேர் மாயம்

போட்கோஷி மற்றும் திரிசூலி ஆற்றங்கரையோரம் ஏற்பட்ட பயங்கர வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 550க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 1,924 பேர் மாயமாகியுள்ளதாக நேபாள பேரிடர் மேலாண்மை ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது.

இதில் அதிகபட்சமாக இந்தியாவை சேர்ந்த 288 பேரும், சீனாவை சேர்ந்த 100 பேரும், அமெரிக்கர்கள் 65 பேரும் அடங்குவர்.

சாலை இணைப்புகள் மற்றும் மொபைல் நெட்வொர்க் துண்டிக்கப்பட்டுள்ளதால் மீட்புப் பணிகளை முழு வீச்சில் மேற்கொள்வதில் பெருமளவில் சிரமங்கள் நீடித்து வருகின்றன.

நீர்மின் திட்டம்

அப்பர் திரிசூலி-1 நீர்மின் திட்டத்தில் சிக்கிய தொழிலாளர்கள்

அப்பர் திரிசூலி-1 216 மெகாவாட் நீர்மின் திட்டப் பகுதியில் பணிபுரிந்த 576 தொழிலாளர்களின் நிலை என்னவென்று இதுவரை தெரியவில்லை.

இவர்களில் சிலர் சுரங்கப் பாதைகளுக்குள் சிக்கியிருக்கலாம் எனப் பயப்படுவதால், அவர்களை மீட்க சிறப்புத் தொழில்நுட்பக் குழுக்கள் அங்கு விரைந்துள்ளன.

சாலைகள் முற்றிலும் சேதமடைந்துள்ளதால் ஹெலிகாப்டர்கள் மூலம் நிவாரணம் வழங்கிட முயற்சிக்கப்பட்டு வருகிறது.

இருப்பினும், மோசமான வானிலை மற்றும் குறுகிய நிலப்பரப்பு காரணமாக வான்வழி மீட்புப் பணிகளிலும் பல்வேறு பின்னடைவுகள் ஏற்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT

இந்தியாவின் மீட்புக் குழு

களத்தில் இறங்கிய இந்திய மீட்புக் குழு மற்றும் நிவாரணப் பொருட்கள்

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நேபாள வெளியுறவு அமைச்சருடன் ஆலோசித்து, தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் சிறப்பு மருத்துவக் குழுவை அனுப்பியுள்ளார்.

ஜெனரேட்டர்கள், உணவுப் பொட்டலங்கள், குடிநீர் சுத்திகரிப்பு மாத்திரைகள் அடங்கிய நிவாரணப் பொருட்களுடன் 11 பேர் கொண்ட மருத்துவ நிபுணர்கள் குழு நேபாளத்திற்கு விரைந்துள்ளது.

மேலும், உடல்களை விரைவில் அடையாளம் காணவும், குடும்பத்தினரிடம் ஒப்படைக்கவும் டிஎன்ஏ பரிசோதனைக்கான ஆய்வக உதவிகளையும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் வழங்கவுள்ளன.

ADVERTISEMENT