Loading...
சீனாவிடமிருந்து 20 J-10CE போர் விமானங்களை வாங்க வங்கதேசம் முடிவு: பின்னணியில் ஆபரேஷன் சிந்தூர் காரணம்
சீனாவிடமிருந்து 20 J-10CE போர் விமானங்களை வாங்க வங்கதேசம் முடிவு

சீனாவிடமிருந்து 20 J-10CE போர் விமானங்களை வாங்க வங்கதேசம் முடிவு: பின்னணியில் ஆபரேஷன் சிந்தூர் காரணம்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 28, 2026
11:03 am

செய்தி முன்னோட்டம்

வங்கதேசத்தில் தாரிக் ரஹ்மான் தலைமையிலான புதிய அரசு தனது விமானப்படையை புதுப்பித்து நவீனப்படுத்தும் நோக்கில், சீனாவிடமிருந்து 20 J-10CE மல்டிரோல் போர் விமானங்களை வாங்கத் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. சுமார் 2.3 பில்லியன் டாலர் (சுமார் ₹28,314 கோடி டாக்கா) மதிப்பீட்டில் இந்த ஒப்பந்தத்திற்கான வரைவு உடன்படிக்கை தயாராகி உள்ளதாக பிரதமர் தாரிக் ரஹ்மானின் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை ஆலோசகர் ஸாஹித் உர் ரஹ்மான் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

ஆபரேஷன் சிந்தூர்

ஆபரேஷன் சிந்தூர் மோதலை காரணியாகக் காட்டிய வங்கதேசம்

இந்தக் கொள்முதல் முடிவிற்குக் கடந்த மே 2025ல் இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற ஆபரேஷன் சிந்தூர் மோதலே முக்கிய காரணம் என வங்கதேசம் தெரிவித்துள்ளது.

இப்போரின் போது பாகிஸ்தான் பயன்படுத்திய சீனத் தயாரிப்பான J-10CE போர் விமானம், இந்தியாவின் 4.5 தலைமுறை ரஃபேல் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறிய தகவலை மேற்கோள் காட்டி, சீன விமானங்களின் செயல்திறன் தங்களை மிகவும் கவர்ந்துள்ளதாக வங்கதேச அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மறுப்பு

இந்திய அரசு மற்றும் விமானப்படையின் மறுப்பு

பாகிஸ்தானின் J-10CE விமானங்கள் இந்தியாவின் ரஃபேல் போர் விமானங்களை வீழ்த்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை இந்திய அரசு மற்றும் ரஃபேல் நிறுவனத் தலைவர் எரிக் டிராப்பியர் ஆகியோர் முற்றிலும் மறுத்துள்ளனர்.

மேலும், இந்திய விமானப்படை தலைவர் ஏ.பி.சிங், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாகிஸ்தானின் 5 போர் விமானங்கள் மற்றும் 1 பெரிய ராணுவ விமானத்தை இந்தியப் படைகள் சுட்டு வீழ்த்தியதாகத் தெரிவித்துள்ளார்.

இந்திய விமானப்படை தனது 36 ரஃபேல் விமானங்களுக்கும் பராமரிப்பு டெண்டர் கோரியிருப்பது பாகிஸ்தானின் பொய் பிரச்சாரத்தை உடைக்கிறது.

ADVERTISEMENT

புதிய கூட்டணி

தெற்காசியாவில் சீனா - வங்கதேசம் இடையிலான பாதுகாப்பு கூட்டணி

பாகிஸ்தானுக்கு அடுத்தபடியாக சீனாவின் J-10CE போர் விமானங்களை வாங்கும் இரண்டாவது வெளிநாடாக வங்கதேசம் மாறவுள்ளது.

10 ஆண்டுகள் தவணை முறையில் செலுத்தப்படவுள்ள இந்த ஒப்பந்தம், தெற்காசியப் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை மேலும் அதிகரிக்கும் எனப் பாதுகாப்பு நிபுணர்கள் கருதுகின்றனர்.

குறிப்பாக, இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை இணைக்கும் சிலிகுரி காரிடார் பகுதிக்கு அருகில் சீனத் தயாரிப்பு போர் விமானங்கள் நிலைநிறுத்தப்பட வாய்ப்புள்ளது இந்திய பாதுகாப்பு வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.

ADVERTISEMENT