நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு Good News; தொடர்ந்து இரண்டாவது நாளாக தங்கம் விலை சரிவு
செய்தி முன்னோட்டம்
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை இன்று மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி, வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 28), சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹75 குறைந்து ₹14,650 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹600 குறைந்து ₹1,17,200 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹82 குறைந்து ₹15,982 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹656 குறைந்து ₹1,27,856 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலை நிலவரம்
18 காரட் தங்கத்தின் விலையும் இன்று குறைந்துள்ளது.
அதன்படி, 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹130 குறைந்து ₹12,420 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
18 கேரட் தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,040 குறைந்து ₹99,360 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
இதற்கிடையே வெள்ளிக்கிழமை வெள்ளி விலையும் குறைந்துள்ளது.
வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹5 குறைந்து ₹260 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ வெள்ளி ₹2,60,000 ஆக விற்கப்படுகிறது.