Loading...
2026 நோபல் அமைதிப் பரிசு வென்றார் இந்திய தமிழ் வம்சாவளி நவநீதம் பிள்ளை; முழு விபரம்
2026 நோபல் அமைதிப் பரிசு வென்றார் இந்திய தமிழ் வம்சாவளி நவநீதம் பிள்ளை

2026 நோபல் அமைதிப் பரிசு வென்றார் இந்திய தமிழ் வம்சாவளி நவநீதம் பிள்ளை; முழு விபரம்

எழுதியவர் Sekar Chinnappan
Oct 09, 2026
02:45 pm

செய்தி முன்னோட்டம்

2026 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு, மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்ட மேம்பாட்டிற்காகத் உலகளவில் பங்காற்றிய தென்னாப்பிரிக்காவை சேர்ந்த இந்திய வம்சாவளி சட்ட நிபுணரான நவநீதம் பிள்ளைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நார்வே நாட்டின் நோபல் கமிட்டி இவரை அமைதிக்கான நோபல் பரிசுக்கு அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்து வெள்ளிக்கிழமை (அக்டோபர் 9) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் நோபல் அமைதிப் பரிசு பெறும் முதல் தமிழ் பெண்மணி என்ற வரலாற்று பெருமையை இவர் பெற்றுள்ளார்.

விருது

மனித உரிமைகள் மற்றும் சர்வதேசச் சட்ட மேம்பாட்டிற்கான விருது

உலகளவில் அமைதியை நிலைநாட்டவும், சர்வதேச சட்டங்களின் ஆட்சியை உறுதிப்படுத்தவும், பாதிக்கப்பட்ட மக்களின் மனித உரிமைகளைப் பாதுகாக்கவும் நவநீதம் பிள்ளை ஆற்றிய ஈடிணையற்ற சேவைகளைப் பாராட்டி இந்த விருது வழங்கப்படுவதாக நார்வே நோபல் கமிட்டி தெரிவித்துள்ளது.

தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிரான போராட்டம் முதல் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதியாக செயல்பட்டது வரை, மனித உரிமைப் பாதுகாப்பில் இவரது பங்களிப்பு சர்வதேச அளவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

கௌரவம்

தென்னாப்பிரிக்காவில் பிறந்து சர்வதேச அமைப்பில் உயர்ந்த பதவி

இந்திய தமிழ் வம்சாவளி குடும்பத்தில் 1941 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் பிறந்த நவநீதம் பிள்ளை, தென்னாப்பிரிக்க உயர் நீதிமன்றத்தின் முதல் வெள்ளையர் அல்லாத பெண் நீதிபதியாகப் பொறுப்பேற்று சாதனை படைத்தவர் ஆவார்.

பின்னர் ஐநா சபையின் மனித உரிமைகள் ஆணையராகவும், ருவாண்டா சர்வதேசக் குற்றவியல் தீர்ப்பாயத்தின் தலைவராகவும், நெதர்லாந்து ஹேக் நகரில் உள்ள சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதியாகவும் சிறப்பாகப் பணியாற்றினார்.

ADVERTISEMENT

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT