LOADING...
அமெரிக்கா: மினசோட்டாவில் 5 வயது சிறுவன் ICE அதிகாரிகளால் சிறைபிடிப்பு; கொதித்தெழுந்த சமூக ஆர்வலர்கள்
மினசோட்டாவில் 5 வயது சிறுவன் ICE அதிகாரிகளால் சிறைபிடிப்பு

அமெரிக்கா: மினசோட்டாவில் 5 வயது சிறுவன் ICE அதிகாரிகளால் சிறைபிடிப்பு; கொதித்தெழுந்த சமூக ஆர்வலர்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Jan 23, 2026
09:28 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அரசின் குடியேற்றவாசிகளுக்கு எதிரான தீவிர நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மினசோட்டாவின் கொலம்பியா ஹைட்ஸ் பகுதியில் 5 வயது சிறுவன் லியாம் கொனேஜோ ராமோஸ் மற்றும் அவனது தந்தை ஏட்ரியன் ஆகியோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை, பள்ளி முடிந்து தனது தந்தையுடன் வீட்டிற்கு திரும்பிய லியாமை, ஆயுதம் ஏந்திய ஐசிஇ (ICE) அதிகாரிகள் வழிமறித்தனர். அப்போது அங்கிருந்தவர்கள் லியாமை தற்காலிகமாக பராமரிக்க முன்வந்தும், அதிகாரிகள் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். மாறாக, சிறுவனை வீட்டு கதவைத் தட்ட சொல்லி, உள்ளே இருப்பவர்களை வெளியே வரவழைக்க அவனை ஒரு 'பெய்ட்' (Bait - தூண்டில்)போல பயன்படுத்தியதாக பள்ளி அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

எதிர்ப்பு

லியாமின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதும் கண்டனங்கள் கிளம்பியுள்ளன

நீல நிறத் தொப்பி மற்றும் 'ஸ்பைடர்மேன்' பையை முதுகில் சுமந்தபடி, பயத்தில் உறைந்து நிற்கும் லியாமின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி, கண்டனங்களை ஈர்த்துள்ளது. தற்போது லியாம் மற்றும் அவனது தந்தை டெக்சாஸில் உள்ள ஒரு தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். இக்குடும்பத்தின் வழக்கறிஞர் மார்க் ப்ரோகோஷ் கூறுகையில், "லியாமின் குடும்பத்தினர் அமெரிக்காவில் அகதிகளாகத் தங்குவதற்கு முறையாக விண்ணப்பித்துள்ளனர். அவர்கள் எந்த சட்டவிரோதச் செயலிலும் ஈடுபடவில்லை" என்று தெரிவித்துள்ளார். மினசோட்டா ஆளுநர் டிம் வால்ஸ் மற்றும் செனட்டர் ஆமி குளோபுச்சார் உள்ளிட்டோர் இந்தச் சம்பவத்தை 'மனிதாபிமானமற்ற செயல்' எனக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement