Page Loader
அமெரிக்க ஜனாதிபதி பதவியேற்பில் ஜனவரி 20 -இன் முக்கியத்துவத்தை தெரிந்துகொள்ளுங்கள்!
டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்பார்

அமெரிக்க ஜனாதிபதி பதவியேற்பில் ஜனவரி 20 -இன் முக்கியத்துவத்தை தெரிந்துகொள்ளுங்கள்!

எழுதியவர் Venkatalakshmi V
Jan 20, 2025
10:36 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்க ஜனாதிபதி பதவியேற்பு என்பது அமெரிக்க ஜனநாயகத்தின் ஒரு மூலக்கல்லாகும், இது ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கு நடைபெறும் அதிகார மாற்றுவதைக் குறிக்கிறது. ஆனால் இந்த முக்கியமான நிகழ்வு ஏன் குறிப்பாக ஜனவரி 20 அன்று நடைபெறுகிறது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அதற்கு ஒரு வரலாற்று காரணம் உண்டு. அதை தெரிந்து கொள்ளுங்கள்!

வரலாற்று மாற்றம்

மார்ச் முதல் ஜனவரி வரை ஒரு வரலாற்று மாற்றம்

அமெரிக்க அரசாங்கம் முதலில் தொடங்கியபோது, ​​ஜார்ஜ் வாஷிங்டனின் முதல் பதவிக்காலத்திற்கான அதிகாரப்பூர்வ தொடக்க தேதியாக மார்ச் 4, 1789 என காங்கிரஸ் நியமித்தது. இருப்பினும், ஒரு வானிலை மற்றும் தளவாடங்கள் தொடர்பான தாமதங்கள் காரணமாக அப்போது ஜார்ஜ் வாஷிங்டன் ஏப்ரல் 30, 1789 அன்றே பதவியேற்றார். அதன் பின்னர் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக, ஜனாதிபதிகள் மார்ச் 4 அன்று பதவியேற்றனர். இருப்பினும் 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் வாக்கு எண்ணும் பயணமும் அதிக நேரம் எடுத்ததால் தேர்தல் நாளுக்கும் பதவியேற்பு நாளுக்கும் இடையே இந்த இடைவெளி அவசியமாக இருந்தது.

திருத்தம்

முன்னேற்றங்கள் மற்றும் 20வது திருத்தம்

20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சிகள் தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்தை மேம்படுத்தின. வாக்குகள் வேகமாக எண்ணப்பட்டன, மேலும் புதிய தலைவர்கள் வாஷிங்டன் டிசிக்கு மிகவும் திறமையாக பயணிக்க முடியும் எனவே, நீண்ட ஆட்சி மாற்ற காலம் தேவைபடவில்லை. இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண, அரசியலமைப்பின் 20வது திருத்தம் 1933 இல் அங்கீகரிக்கப்பட்டது. இது அதிகாரப்பூர்வமாக பதவியேற்பு நாளை மார்ச் 4ல் இருந்து ஜனவரி 20க்கு மாற்றியது.

பாரம்பரியம்

ஜனவரி 20 பாரம்பரியம்

ஜனவரி 20 அன்று முதல் ஜனாதிபதி பதவியேற்பு 1937 இல் நடைபெறுகிறது. அன்று முதல் அமெரிக்கா இந்த பாரம்பரியத்தை பின்பற்றுகிறது. எப்போதாவது, ஜனவரி 20 ஞாயிற்றுக்கிழமை வரும் போது, ​​ஜனாதிபதி தனிப்பட்ட முறையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்வார். மறுநாள் ஜனவரி 21 அன்று ஒரு பொது விழா நடைபெறும். இந்த நடைமுறையானது வரலாற்று நிகழ்வில் பொதுமக்களின் பங்கேற்புக்கு இடமளிக்கும் அதே நேரத்தில் அரசியலமைப்பை பின்பற்றுவதை உறுதி செய்கிறது. இந்த ஆண்டு, டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்பார்.