ஜார்ஜியாவில் புதிய வரலாறு: அமெரிக்காவின் முதல் கருப்பின பெண் ஆளுநராக கீஷா லான்ஸ் பாட்டம்ஸ் தேர்வு
செய்தி முன்னோட்டம்
அமெரிக்காவில் நடைபெற்ற இடைக்காலத் தேர்தலில், ஜார்ஜியா மாகாணத்தின் புதிய ஆளுநராக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கீஷா லான்ஸ் பாட்டம்ஸ் தேர்வாகியுள்ளார். இதன் மூலம், அமெரிக்க மாகாணம் ஒன்றின் ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஆப்பிரிக்க-அமெரிக்க கருப்பினப் பெண் என்ற புதிய வரலாற்றுப் பெருமையை அவர் பெற்றுள்ளார். அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை, செனட் சபை இடங்கள் மற்றும் பல்வேறு மாகாண ஆளுநர் பதவிகளுக்கான வாக்குப்பதிவு இந்திய நேரப்படி நவம்பர் 3 மாலை நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கையின் முடிவில் இத்தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதிய மைல்கல்
குடியரசுக் கட்சியை வீழ்த்தி அபார வெற்றி
ஜார்ஜியா ஆளுநர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட அட்லாண்டா மாநகராட்சியின் முன்னாள் மேயர் கீஷா லான்ஸ் பாட்டம்ஸ், குடியரசுக் கட்சியின் தொழிலதிபர் ரிக் ஜாக்ஷனைத் தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார்.
இதன்மூலம் 1998-ஆம் ஆண்டுக்குப் பிறகு, சுமார் 28 ஆண்டுகள் கழித்து ஜார்ஜியாவில் ஆளுநர் நாற்காலியை ஜனநாயகக் கட்சி மீண்டும் கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது.
அமெரிக்க அரசியலில் பெரும் திருப்புமுனையாகப் பார்க்கப்படும் இந்த வெற்றியின் வாயிலாக, ஜார்ஜியா மாகாணத்தின் முதல் பெண் ஆளுநர் மற்றும் முதல் கருப்பின ஆளுநர் என்ற வரலாற்றுச் சிறப்பை கீஷா பெற்றுள்ளார்.
வெற்றிக்கு பின் பேசிய அவர், மாகாணத்தின் பொருளாதார வளர்ச்சி, கல்வி மற்றும் சமூக நலன்களுக்குத் தனது ஆட்சியில் முன்னுரிமை வழங்கப்படும் என ஆதரவாளர்கள் மத்தியில் உறுதியளித்துள்ளார்.