
இஸ்ரேல்-ஹமாஸ் போர்நிறுத்தம் நீட்டிக்கப்பட்டதை தொடர்ந்து மேலும் 11 பிணயக்கைதிகள் விடுவிப்பு
செய்தி முன்னோட்டம்
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர்நிறுத்தம் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிக்கப்படுவதாக ஹமாஸ் திங்களன்று அறிவித்தது.
இதனை தொடர்ந்து, காசா பகுதியில் இருந்து மேலும் 11 இஸ்ரேலிய பிணயக்கைதிகள் விடுவிக்கப்ட்டனர்.
ஹமாஸ் குழு, இஸ்ரேல் பிணையக்கைதிகளை விடுவிக்க ஒப்பு கொண்டதை அடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை முதல் இஸ்ரேல்-ஹமாஸ் போர் 4 நாட்களுக்கு இடை நிறுத்தப்பட்டது.
அந்த 4 நாட்கள் இடை நிறுத்தம் இந்த செவ்வாய்க்கிழமையுடன் முடிவடைய இருந்த நிலையில், தொடர்ந்து பிணயக்கைதிகளை திரும்ப பெறும் நோக்கில், இஸ்ரேல் மேலும் 48 மணி நேரத்திற்கு போர்நிறுத்ததை நீட்டித்துள்ளது.
எனினும், இது குறித்து இஸ்ரேல் எந்த அதிகாரபூர்வ தகவலையும் வெளியிடவில்லை.
டிலான்
3 பாலஸ்தீன கைதிகள் விடுவிப்பு
இதற்கிடையில், இஸ்ரேலின் இந்த முடிவுக்கு ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
"போரின் இருளுக்கு இடையில் நம்பிக்கை மற்றும் மனிதநேயத்தின் ஒரு ஒளி தெரிகிறது" என்று அவர் பாராட்டியுள்ளார்.
திங்கட்கிழமை பிற்பகலுக்கு மேல், 11 இஸ்ரேலிய பிணையக்கைதிகள் இஸ்ரேலுக்கு திரும்பிவிட்டதாக இஸ்ரேலின் இராணுவம் அறிவித்தது.
"அவர்கள் தங்கள் குடும்பங்களுடன் மீண்டும் இணையும் வரை எங்கள் படைகள் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும்" என்று இஸ்ரேல் இராணுவம் ஒரு அறிக்கையில் தெரிவித்திருந்தது.
11 இஸ்ரேலிய பிணையக்கைதிகள் நாடு திரும்பிய சிறிது நேரத்திலேயே, 33 பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
எனவே, 4 நாட்கள் போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேல் 150 பாலஸ்தீன கைதிகளையும், ஹமாஸ் 58 இஸ்ரேலிய கைதிகளையும் விடுதலை செய்துள்ளது.