காசா மீது இரண்டாவது கட்டத் தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல்
செய்தி முன்னோட்டம்
காசா உடனான போர் 'இரண்டாம் கட்டத்திற்கு' நகர்ந்துள்ளதாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி, ஹமாஸ் நடத்திய திடீர் ஏவுகணை தாக்குதலுக்கு பின், இஸ்ரேல் பாலஸ்தீன் இடையே போர் மூண்டது.
தற்போது 23வது நாளாக போர் நீடித்து வரும் நிலையில், காசாவிற்குள் புகுந்து இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.
மேலும் வடக்கு காசா பகுதியில் உள்ள மக்களை, வெளியேற வலியுறுத்தி இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் துண்டு பிரசுரங்களையும் வீசி வருகிறது.
2nd card
போர் நீண்டதாகவும் கடுமையானதாகவும் இருக்கும்- நெதன்யாகு
காசா உடனான தற்போது நடைபெற்று வரும் போர், நீண்டதாகவும் கடுமையானதாக இருக்கும் எனவும் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் தொலைக்காட்சி வாயிலாக பத்திரிகையாளர்களை சந்தித்த நெதன்யாகு, "தரைக்கு மேல் மற்றும் தரைக்கு கீழ் உள்ள எதிரிகள் அழிக்கப்படுவார்கள்".
"நாம் இப்போது சோதனையை எதிர்கொண்டு உள்ளோம். இது எப்படி முடியும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. நாம் வெற்றி பெறுவோம்" என தெரிவித்தார்.
முன்னதாக, ஹமாஸ் அமைப்பால் பிணையத் கைதிகளாக பிடித்து செல்லப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்து, அவர்களுக்கு நெதன்யாகு ஆறுதல் தெரிவித்தார்.
மேலும் பிணையக் கைதிகளை மீட்பது, ராணுவ நடவடிக்கையின் மிக முக்கிய பகுதி என தெரிவித்தார்.
3rd card
ஹமாஸ் மீதான இரண்டாம் கட்ட தாக்குதல் என்றால் என்ன?
கடந்த வாரம், இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட், பாராளுமன்றக் குழுவிடம் போர் மூன்று கட்டங்களாக நடைபெறும் என கூறினார்.
ஹமாஸ் அமைப்பை தோற்கடித்து, முழுவதுமாக அழிப்பது முதல் கட்டம் என்றும்,
சிறு எதிர்ப்பை கூட விட்டு வைக்காமல் அழிப்பது இரண்டாவது கட்டம் என்றும்,
மூன்றாவது கட்டமாக, காசாவில் வாழ்பவர்கள் மீதான இஸ்ரேலின் பொறுப்பை நீக்கி, இஸ்ரேல் மக்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்வது என தெரிவித்தார்.
இப்போரில் 8,000 பாலஸ்தீன் மக்கள் கொள்ளப்பட்டுள்ளதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ள நிலையில், இஸ்ரேலின் இரண்டாம் கட்ட தாக்குதல் உயிரிழப்புகளை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.