பஹ்ரைன், குவைத், யுஏஇவில் அமெரிக்க நிலைகளைத் தரைமட்டமாக்கும் ஈரான்; வளைகுடா நாடுகளில் போர் முழக்கம்
செய்தி முன்னோட்டம்
மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரான் தனது மெகா பதில் தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இந்த மோதலில் பஹ்ரைன், குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. "தாய்நாட்டைப் பாதுகாக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது" என ஈரான் அறிவித்து இந்த தாக்குதலை தொடங்கியுள்ளது. கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளை இலக்கு வைத்து ஈரான் நடத்திய தாக்குதலால் அங்குக் கடுமையான குண்டுவெடிப்புச் சத்தங்கள் கேட்டுள்ளன. மொபைல் போன்கள் மூலம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல்
இஸ்ரேல் மீது ட்ரோன் தாக்குதல்
முதற்கட்டமாக இஸ்ரேலை நோக்கி நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவி ஈரான் தனது தாக்குதலைத் தொடங்கியது. இதனால் இஸ்ரேல் முழுவதும் அபாயச் சங்கொலிகள் ஒலிக்கின்றன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் மக்கள் தங்கள் அரசாங்கத்தைக் கவிழ்க்க முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். மேலும், ஈரான் மீது அமெரிக்கா பெரிய அளவிலான போர் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளார். ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியின் அலுவலகத்திற்கு அருகிலேயே முதல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் கரும்புகை சூழ்ந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கண்டனம்
பஹ்ரைன் கண்டனம்
தனது இறையாண்மையைப் பாதிக்கும் வகையில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலைப் பஹ்ரைன் வன்மையாகக் கண்டித்துள்ளது. நாட்டில் அவசரநிலை நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. ஈரானில் வசிக்கும் இந்தியர்கள் அனைவரும் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறும், அத்தியாவசியமின்றி வெளியே வர வேண்டாம் என்றும் இந்தியத் தூதரகம் அவசர அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. இஸ்ரேலிய மக்கள் நிலத்தடிப் பாதுகாப்பு அறைகளுக்கு அருகிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தொலைக்காட்சிகள் கூட பாதுகாப்பு அறைகளிலிருந்தே செய்திகளை ஒளிபரப்பி வருகின்றன.
புனிதமான பணி
புனிதமான பணி என வர்ணிப்பு
அமெரிக்க ராணுவத்தின் முக்கியத் தளம் அமைந்துள்ள குவைத்தில் சைரன் சத்தங்களும் குண்டுவெடிப்புகளும் கேட்டுள்ளன. சேத விவரங்கள் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை. ஈரானின் அணுசக்தித் திட்டங்கள் அமெரிக்காவிற்கு அச்சுறுத்தலாக இருப்பதால், இந்தத் தாக்குதல் ஒரு "புனிதமான பணி" என்று டிரம்ப் வர்ணித்துள்ளார்.