LOADING...
"நாங்க இன்னும் சம்மதிக்கல": டொனால்ட் ட்ரம்பின் அவசர அறிவிப்புக்கு ஈரான் அதிரடி முற்றுப்புள்ளி
அமெரிக்காவுடன் இன்னும் இறுதி உடன்பாடு எட்டப்படவில்லை என்று ஈரான் தெரிவித்துள்ளது

"நாங்க இன்னும் சம்மதிக்கல": டொனால்ட் ட்ரம்பின் அவசர அறிவிப்புக்கு ஈரான் அதிரடி முற்றுப்புள்ளி

எழுதியவர் Venkatalakshmi V
Jun 12, 2026
07:21 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புடன் மிக விரைவில் வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகப் போகிறது என்ற எதிர்பார்ப்புகள் உலகளவில் எழுந்த நிலையில், ஈரான் அதற்கு அதிகாரப்பூர்வமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அமெரிக்காவுடன் இன்னும் இறுதி உடன்பாடு எட்டப்படவில்லை என்றும், பேச்சுவார்த்தைகள் இன்னும் முழுமையடையாத நிலையில் உள்ளன என்றும் ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், ஒப்பந்தம் முடிவடைந்துவிட்டதாக வெளியாகும் செய்திகள் அனைத்தும் வெறும் யூகங்கள் என்று வர்ணித்தார். மேலும், முன்மொழியப்பட்ட ஒப்பந்தம் குறித்து ஈரான் இன்னும் எந்தவொரு இறுதி முடிவையும்எடுக்கவில்லை என்றும், பேச்சுவார்த்தை இன்னும் நிறைவடையவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார். இது, அடுத்த சில நாட்களில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று கூறிவந்த ட்ரம்பின் கூற்றுக்குக் கிடைத்த பின்னடைவாகக் கருதப்படுகிறது.

குற்றச்சாட்டு

அமெரிக்காவின் புதிய நிபந்தனைகளும் அதீத கோரிக்கைகளும்

இரு நாடுகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை ஒப்புக்கொண்ட பாகேய், அதே நேரத்தில் அமெரிக்கா புதிய முட்டுக்கட்டைகளை உருவாக்குவதாகக் குற்றம் சாட்டினார். "ஒப்பந்த வரைவின் பெரும்பகுதி ஏற்கனவே இறுதி செய்யப்பட்டுவிட்டது உண்மைதான். ஆனால், பேச்சுவார்த்தையின் இறுதிக்கட்டத்தில் வாஷிங்டன் தேவையில்லாத 'அதீத கோரிக்கைகளையும்', புதிய நிபந்தனைகளையும் உள்ளே நுழைத்து ஒட்டுமொத்தப் செயல்முறையையும் சிக்கலாக்குகிறது" என்றார். அமெரிக்காவின் ராணுவ அல்லது பொருளாதார அழுத்தங்களுக்கு அடிபணிந்து ஈரான் தனது நிலைப்பாட்டை ஒருபோதும் தளர்த்திக் கொள்ளாது என்றும், நாட்டின் இறையாண்மை சார்ந்த 'சிவப்புக்கோடுகளை' எக்காரணம் கொண்டும் ஈரானியப் பேச்சுவார்த்தைக் குழுவினர் தாண்ட மாட்டார்கள் என்றும் பாகேய் உறுதியளித்தார்.

Advertisement