
இராணுவ உதவிக்கு ஒப்புதல் அளித்தது அமெரிக்கா: மோதலில் இருந்து ஈரான்-இஸ்ரேல் பின்வாங்கியதாக தகவல்
செய்தி முன்னோட்டம்
ஈரானுக்கு எதிரான மோதலில் இஸ்ரேலுக்கு இராணுவ உதவி வழங்க அமெரிக்கா நேற்று முன் வந்ததால், அந்த மோதலில் இருந்து ஈரானும் இஸ்ரேலும் பின்வாங்குவது போல் தெரிகிறது என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.
ஏற்கனவே பாலத்தீனியர்களுக்கு எதிரான போரில் அமெரிக்கா இஸ்ரேலுக்கு இராணுவ உதவி வழங்கி வருகிறது. இதனால் உலக நாடுகள் அமெரிக்காவை விமர்சித்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஈரானுக்கு எதிரான மோதலில் இஸ்ரேலுக்கு இராணுவ உதவி வழங்கவும் அமெரிக்கா முன்வந்துள்ளது.
ஈரான்
ஈராக்கில் இருந்த ஈரான் ஆதரவு படைகள் மீது திடீர் தாக்குதல்
சிரியாவின் டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரக வளாகத்தில் ஏப்ரல் 1 ஆம் தேதி இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலுக்குப் பழிவாங்குவதாக ஈரான் சபதம் செய்ததது.
சபதம் செய்தது போலவே ஈரான், இஸ்ரேல் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தியது.
இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
அதன் பிறகு ஈரான் எந்த தாக்குதலை நடத்தவில்லை.
இந்நிலையில், நேற்று மத்திய ஈராக்கில் இராணுவத் துருப்புக்கள் மற்றும் ஈரானுக்கு ஆதரவான துணைப்படைகள் தங்கியிருந்த ஒரு இராணுவத் தளத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. கால்சோ தளத்தில் நடந்த குண்டுவெடிப்பில் ஒருவர் உயிரிழந்தார். எட்டு பேர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு பிறகு, ஈரான் எந்த தாக்குதலையும் நடத்தவில்லை.