LOADING...
அமெரிக்காவின் $300 மில்லியன் மதிப்பிலான தாட் ரேடாரை ஈரான் அழித்தது உண்மையா? முழு விவரம்
அமெரிக்காவின் $300 மில்லியன் மதிப்பிலான தாட் ரேடாரை அழித்த ஈரான்

அமெரிக்காவின் $300 மில்லியன் மதிப்பிலான தாட் ரேடாரை ஈரான் அழித்தது உண்மையா? முழு விவரம்

எழுதியவர் Sekar Chinnappan
Mar 08, 2026
08:21 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஜோர்டானில் உள்ள முவாஃபக் சால்டி விமான தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்காவின் அதிநவீன தாட் ரேடார் அமைப்பை ஈரான் ஏவுகணைகள் தாக்கி அழித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் $300 மில்லியன் (இந்திய மதிப்பில் சுமார் ₹2,500 கோடி) மதிப்பிலான இந்த ரேடார் சிஸ்டம், ஏவுகணைகளைக் கண்டறிந்து அழிப்பதில் மிக முக்கியமானது. கூடுதல் விவரங்கள் இங்கே:-

புகைப்படங்கள்

செயற்கைக்கோள் புகைப்படங்கள் உறுதி

இந்தத் தாக்குதல் குறித்த செயற்கைக்கோள் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. மார்ச் 1 அல்லது 2 ஆம் தேதிகளில் இந்தத் தாக்குதல் நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. புகைப்படங்களில் ரேடார் நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் இரண்டு பெரிய பள்ளங்கள் இருப்பதும், உபகரணங்கள் எரிந்து சிதைந்து கிடப்பதும் தெரிகிறது. ஜோர்டான் மட்டுமல்லாமல், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அமெரிக்க ரேடார் தளங்களையும் குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

முக்கியத்துவம்

தாட் ரேடாரின் முக்கியத்துவம்

AN/TPY-2 என அழைக்கப்படும் இந்த ரேடார், ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் வரும் எதிரி நாட்டு ஏவுகணைகளைத் துல்லியமாகக் கண்டறியும் திறன் கொண்டது. உலகிலேயே அமெரிக்காவிடம் மிகக்குறைந்த எண்ணிக்கையிலான (சுமார் 8 முதல் 12 வரை) தாட் அமைப்புகளே உள்ளன. இதில் ஒன்று அழிக்கப்பட்டது அமெரிக்காவின் பாதுகாப்பு வளையத்தில் பெரிய ஓட்டையை ஏற்படுத்தியுள்ளது. இந்த ரேடார் செயலிழந்ததால், இனி பேட்ரியாட் ஏவுகணை அமைப்புகளை மட்டுமே அமெரிக்கா நம்ப வேண்டியிருக்கும். ஆனால், அவற்றின் ஏவுகணைகளுக்கும் தற்போது தட்டுப்பாடு நிலவுவதாகக் கூறப்படுகிறது.

Advertisement

அமெரிக்கா

போர்ச் சூழலும் அமெரிக்காவின் நிலையும்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுக்கு எதிராகப் பெரிய அளவிலான தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரித்துள்ளார். அதேசமயம், கடந்த சில நாட்களில் மட்டும் அமெரிக்கா சுமார் $2 பில்லியன் மதிப்பிலான ராணுவ தளவாடங்களை இழந்துள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. ஈரானின் இந்தத் துல்லியமான தாக்குதல் அதன் ஏவுகணை வலிமையை உலகுக்குக் காட்டியுள்ளது.

Advertisement