LOADING...
ட்ரம்பின் 'பேச்சுவார்த்தை' கூற்றை மறுத்த ஈரான்; "பயந்து பின்வாங்கிய அமெரிக்கா" என அறிக்கை
ட்ரம்பின் 'பேச்சுவார்த்தை' கூற்றை மறுத்த ஈரான்

ட்ரம்பின் 'பேச்சுவார்த்தை' கூற்றை மறுத்த ஈரான்; "பயந்து பின்வாங்கிய அமெரிக்கா" என அறிக்கை

எழுதியவர் Venkatalakshmi V
Mar 23, 2026
06:53 pm

செய்தி முன்னோட்டம்

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த இரண்டு நாட்களாக "ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகள்" நடைபெற்று வருவதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்த நிலையில், அதனை ஈரான் அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. அமெரிக்காவுடன் நேரடி அல்லது மறைமுகமான எந்தத் தொடர்பும் இல்லை என ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காபூலில் உள்ள ஈரானிய தூதரகம் தனது எக்ஸ் (X) தளத்தில், "ஈரானின் கடுமையான எச்சரிக்கைக்குப் பிறகு ட்ரம்ப் பின்வாங்கல்" என்ற தலைப்பில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளது. அதில், "ஈரானின் எரிசக்தி நிலையங்கள் தாக்கப்பட்டால், ஒட்டுமொத்த பிராந்தியத்தின் எரிசக்தி கட்டமைப்புகளையும் தகர்ப்போம் என ஈரான் எச்சரித்ததால்தான், பயந்துபோய் ட்ரம்ப் தனது தாக்குதல் திட்டத்தை ஒத்திவைத்துள்ளார்," எனக் குறிப்பிட்டுள்ளது.

முரண்

ட்ரம்பின் முரண்பட்ட கருத்துக்கள்

முன்னதாக, தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்டிருந்த ட்ரம்ப், ஈரானுடன் மிகச் சிறந்த முறையில் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், அதன் அடிப்படையில் 5 நாட்களுக்குத் தாக்குதல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியிருந்தார். ஆனால், கடந்த வெள்ளிக்கிழமை அவர் பேசுகையில்,"ஈரானில் பேசுவதற்கு ஒரு தலைவர் கூட இல்லை, அந்த நிலைமை எங்களுக்குப் பிடித்துள்ளது," என முரண்பாடாக குறிப்பிட்டிருந்தது நினைவுகூரத்தக்கது. ஈரானிய அரசுத் தொலைக்காட்சி, "ஈரானின் உறுதியான எச்சரிக்கையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் பணிந்தார்" என்ற வாசகத்தை ஒளிபரப்பி வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க ட்ரம்ப் விதித்த கெடுவை 5 நாட்களுக்கு நீட்டித்துள்ளதை, ஈரான் தனது ராஜதந்திர வெற்றியாகக் கொண்டாடி வருகிறது.

Advertisement