தொடர்ந்து குறையும் தங்கம் விலை; சவரன் விலை என்ன?
செய்தி முன்னோட்டம்
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் தங்க விலை, திங்கட்கிழமை (மார்ச் 23) மீண்டும் குறைந்துள்ளது. திங்கட்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹545 குறைந்து ₹12,835 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹4,360 குறைந்து ₹1,02,680 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹595 குறைந்து ₹14,002 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹4,760 குறைந்து ₹1,12,016 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலையும் சரிவு
18 காரட் தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. அதன்படி, 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹446 குறைந்து ₹10,502 ஆகவும், ஒரு சவரன் ₹3,568 குறைந்து ₹84,016 ஆகவும் விற்கப்படுகிறது. இதற்கிடையே திங்கட்கிழமை வெள்ளி விலையும் குறைந்துள்ளது. வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹15 குறைந்து ₹230.00 ஆகவும், ஒரு கிலோ ₹2,30,000 ஆகவும் விற்பனை ஆகிறது. ஈரான் -அமெரிக்கா - இஸ்ரேல் இடையிலான போருக்கு மத்தியில் பங்குச் சந்தைகள் சரிவை சந்தித்து வரும் நிலையில், தங்கம் வெள்ளி விலையும் குறைவது முதலீட்டாளர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.