LOADING...
நியூயார்க் விமான நிலையத்தில் ஏர் கனடா விமானம் விபத்து; விமான நிலையம் தற்காலிகமாக மூடல்
நியூயார்க் விமான நிலையத்தில் ஏர் கனடா விமானம் விபத்து

நியூயார்க் விமான நிலையத்தில் ஏர் கனடா விமானம் விபத்து; விமான நிலையம் தற்காலிகமாக மூடல்

எழுதியவர் Venkatalakshmi V
Mar 23, 2026
10:45 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள லாகார்டியா விமான நிலையத்தில் இன்று (மார்ச் 23, 2026) அதிகாலை ஏர் கனடா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று தீயணைப்பு வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு, விமானப் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மாண்ட்ரியலில் இருந்து வந்த ஏர் கனடா எக்ஸ்பிரஸ் விமானம், ஓடுதளத்தில் தரையிறங்கியபோது அங்கு குறுக்கே வந்த 'ட்ரக் 1' என்ற தீயணைப்பு வாகனத்தின் மீது மோதியதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள வீடியோக்களில், விமானத்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்து சிதைந்து போயிருப்பது தெரியவந்துள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

பாதிப்பு

உயிரிழப்பு மற்றும் காயங்கள்

இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், இரு தீயணைப்பு வீரர்கள் உட்பட 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 100-ஐத் தாண்டலாம் என்றும், அதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் சில செய்திகள் தெரிவிக்கின்றன. விமானத்தில் இருந்த 60 பயணிகள் மற்றும் ஊழியர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். விபத்து நடந்த சமயத்தில் அப்பகுதியில் மோசமான வானிலை நிலவியதாகத் தெரிகிறது. விமானி மற்றும் தரைக்கட்டுப்பாட்டு அறைக்கு இடையேயான உரையாடலில், இரு தரப்பையும் நிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்டும் இந்த மோதல் தவிர்க்க முடியாமல் போனது தெரியவந்துள்ளது. அமெரிக்க மத்திய விமான போக்குவரத்து ஆணையம் (FAA) இந்த விபத்து குறித்து விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளது.

Advertisement