LOADING...
ஈரான் - அமெரிக்கா இடையே ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தை; 5 நாட்களுக்குத் தாக்குதல் நிறுத்தம்
ஈரான் மீதான தாக்குதலை தற்காலிகமாக நிறுத்திய ட்ரம்ப்

ஈரான் - அமெரிக்கா இடையே ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தை; 5 நாட்களுக்குத் தாக்குதல் நிறுத்தம்

எழுதியவர் Venkatalakshmi V
Mar 23, 2026
05:15 pm

செய்தி முன்னோட்டம்

மத்திய கிழக்கில் கடந்த நான்கு வாரங்களாக நீடித்து வரும் போர் சூழலில் ஒரு முக்கியத் திருப்பமாக, ஈரான் மீதான ராணுவத் தாக்குதல்களை அடுத்த ஐந்து நாட்களுக்கு தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் இது குறித்துப் பதிவிட்டுள்ள டிரம்ப்,"கடந்த இரண்டு நாட்களாக ஈரானுடன் மிகவும் ஆக்கபூர்வமான மற்றும் விரிவான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. இதன் அடிப்படையில், ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது திட்டமிடப்பட்டிருந்த அனைத்து ராணுவத் தாக்குதல்களையும் ஐந்து நாட்களுக்கு நிறுத்தி வைக்கப் பாதுகாப்புத் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்," எனத்தெரிவித்துள்ளார். இந்தப் பேச்சுவார்த்தைகள் இந்த வாரம் முழுவதும் தொடரும் என்றும், அதன் முடிவுகளை பொறுத்தே அடுத்தகட்ட நகர்வுகள் இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

பின்னணி

போர் பின்னணி

பிப்ரவரி 28 அன்று தொடங்கிய அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப் போர், தற்போது நான்காவது வாரத்தை எட்டியுள்ளது. கடந்த சனிக்கிழமை (மார்ச் 21) ஈரானின் நடான்ஸ் அணுசக்தி மையம் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதற்குப் பதிலடியாக இந்தியப் பெருங்கடலில் உள்ள அமெரிக்க-பிரிட்டிஷ் கூட்டுத் தளத்தை நோக்கி ஈரான் ஏவுகணைகளை வீசியது. இத்தகைய கடுமையான மோதல்களுக்கு மத்தியிலும் தற்போது ஏற்பட்டுள்ள இந்த தற்காலிக போர் நிறுத்தம், ராஜதந்திர ரீதியிலான தீர்வுக்கு ஒரு வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. தற்போதைய 5 நாள் போர் நிறுத்தம் என்பது முழுமையான அமைதிக்கு வழிவகுக்குமா அல்லது தற்காலிகமானதா என்பதை உலக நாடுகள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.

Advertisement