Page Loader
இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்தது ஈரான் ஆதரவு ஹெஸ்பொல்லா அமைப்பு 

இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்தது ஈரான் ஆதரவு ஹெஸ்பொல்லா அமைப்பு 

எழுதியவர் Sindhuja SM
May 26, 2024
01:02 pm

செய்தி முன்னோட்டம்

காசா மோதல் எட்டாவது மாதமாக தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், ஈரான் ஆதரவு லெபனான் அமைப்பான ஹெஸ்பொல்லா, இஸ்ரேல் மீது திடீர் தாக்குதலுக்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது. ஹெஸ்பொல்லா பொதுச்செயலாளர் ஹசன் நஸ்ரல்லாஹ், ஆச்சரியங்களுக்கு தயாராக இருக்குமாறு இஸ்ரேலை எச்சரித்துள்ளார். "எங்கள் தரப்பில் இருந்து நீங்கள் ஆச்சரியங்களை எதிர்பார்த்திருங்கள்" என்று அவர் வெள்ளிக்கிழமை கூறினார். லெபனான் உள்நாட்டுப் போரின் போது பலமான சக்தியாக உருவெடுத்த ஹெஸ்பொல்லா அமைப்பு, பாலஸ்தீனத்திற்கும் காசாவிற்கும் ஆதரவாக இஸ்ரேலுடன் போரிட்டு வருகிறது. கடந்த அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேஸ் மீது பாலஸ்தீனிய ஹமாஸ் குழு தாக்குதல்நடத்தி ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை கொன்றது.

இஸ்ரேல் 

 இஸ்ரேல் அதன் எந்த இலக்குகளையும் அடையவில்லை 

அதனை தொடர்ந்து 8 மாதங்களாக காசா பகுதி மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஆனால் இஸ்ரேலின் அரசியல் தலைவர்கள் காசா போரில் இஸ்ரேல் அதன் எந்த இலக்குகளையும் அடையவில்லை என்று ஒப்புக்கொண்டனர். இஸ்ரேலிய தேசிய பாதுகாப்பு கவுன்சில் தலைவர் சாச்சி ஹனெக்பி, இஸ்ரேல் எந்த மூலோபாய இலக்குகளையும் அடையவில்லை என்றும் அதற்கு பல ஆண்டுகள் ஆகலாம் என்றும் ஒப்புக்கொண்டதாக நஸ்ரல்லாஹ் தெரிவித்துள்ளார். மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் இருக்கும் இஸ்ரேலுக்கு ஏற்பட்ட பின்னடைவுகளையும் நஸ்ரல்லா பட்டியலிட்டுள்ளார். "பல ஐரோப்பிய நாடுகள் பலஸ்தீன அரசை அங்கீகரித்திருப்பது இஸ்ரேலுக்கு பெரும் இழப்பாகும்" என்று ஹெஸ்பொல்லா பொதுச்செயலாளர் ஹசன் நஸ்ரல்லாஹ் கூறியுள்ளார்.