NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / உலகம் செய்தி / அமெரிக்காவின் பழமைவாய்ந்த சட்டப்பத்திரிக்கை தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் நியமனம்
    உலகம்

    அமெரிக்காவின் பழமைவாய்ந்த சட்டப்பத்திரிக்கை தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் நியமனம்

    அமெரிக்காவின் பழமைவாய்ந்த சட்டப்பத்திரிக்கை தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் நியமனம்
    எழுதியவர் Nivetha P
    Feb 07, 2023, 08:43 pm 0 நிமிட வாசிப்பு
    அமெரிக்காவின் பழமைவாய்ந்த சட்டப்பத்திரிக்கை தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் நியமனம்
    அமெரிக்காவின் பழமைவாய்ந்த சட்டப்பத்திரிக்கை தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் நியமனம்

    அமெரிக்காவில் உள்ள ஹார்வர்ட் சட்டப்பள்ளியின் ஒரு பகுதியாக 1887ம் ஆண்டு துவங்கப்பட்டது ஹார்வர்ட் சட்டப் பத்திரிக்கை. இது சட்டம் பயிலும் மாணவர்களுக்கு சட்டம் சார்ந்த தகவல்களை அளித்து வருகிறது. உலகம் முழுவதும் இந்த சட்ட பத்திரிக்கை மிக பிரபலமானது. இந்த பத்திரிக்கையின் தலைமை பதவி நபருக்கான தேடல் அண்மையில் நடந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இந்த பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த அப்சரா அய்யர் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சட்ட பத்திரிக்கை துவங்கி 136 ஆண்டுகால வரலாற்றில் இந்திய பெண் ஒருவர், அதன் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.

    இந்திய வம்சாவளி பெண்ணிற்கு அமெரிக்கா அளித்துள்ள மிக பெரிய கவுரவம்

    சட்டப்பத்திரிக்கை தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள அப்சரா அய்யர், அமெரிக்காவில் உள்ள சட்ட கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். தொல்லியல் மற்றும் பழங்குடி சமூகம் மீது கொண்ட ஈடுபாடு காரணமாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் எம்.ஃபில். படித்துள்ளார் என்று தெரிகிறது. வல்லரசு நாடான அமெரிக்காவின் பழமைவாய்ந்த ஹார்வர்ட் சட்டப் பத்திரிக்கை தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அப்சரா அய்யருக்கு வயது 29 ஆகும். அமெரிக்க பிரபல சட்டப்பத்திரிக்கை தலைவராக பொறுப்பேற்கவுள்ள அப்சராவிற்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இந்திய வம்சாவளியான இவருக்கு அமெரிக்கா அளித்துள்ள மிக பெரிய கவுரவம் இது என்றும் கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    இந்தியா
    அமெரிக்கா

    சமீபத்திய

    இந்த வாரம், வெள்ளித்திரையிலும், OTT தளத்திலும் வெளியாக போகும் படங்கள் என்னென்ன? ஓடிடி
    மதுரை மெட்ரோ - விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது மதுரை
    சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள்: வங்கதேச வீரர் ஷாகிப் அல் ஹசன் சாதனை டி20 கிரிக்கெட்
    நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சிறுத்தைக்கு பிறந்த 4 குட்டிகள் இந்தியா

    இந்தியா

    'சீக்கியர்களே ஒன்றுபடுங்கள்': வீடியோவை வெளியிட்ட அம்ரித்பால் சிங் காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    2021 வரை 472 கைதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது: மத்திய அரசு நாடாளுமன்றம்
    பெற்றோர்கள் இறப்பால் அனாதையான 2 வயது சிறுவன் அமெரிக்காவில் இருந்து மீட்கபடுவான்: தமிழக அரசு உறுதி தமிழ்நாடு
    இந்தி திணிப்பு: தயிர் பாக்கெட்டுகளில் 'தாஹி' என்ற பெயரை போட அறிவுறுத்தல் தமிழ்நாடு

    அமெரிக்கா

    18 மருந்து நிறுவனங்களின் உரிமம் ரத்து: அரசு அதிரடி நடவடிக்கை இந்தியா
    சியாட்டல்: சாதிய பாகுபாட்டைத் தடைசெய்யும் சட்டம் அமலுக்கு வந்தது உலகம்
    ராகுல் காந்தியின் வழக்கை அமெரிக்கா கவனித்து வருகிறது: அமெரிக்க அதிகாரி இந்தியா
    சிலிக்கான் வங்கியின் வைப்புகளும் கடன்களும் முதல் குடிமக்கள் வங்கிக்கு விறக்கப்பட்டது உலகம்

    உலகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    World Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023