Loading...
பிரிட்டன் பிரதமர் அலுவலகத்தின் முக்கிய ஆலோசகராக இந்திய வம்சாவளி கெளதம் ரங்கராஜன் நியமனம்! யார் இவர்?
பிரிட்டன் பிரதமர் ஆலோசகராக இந்திய வம்சாவளி கெளதம் ரங்கராஜன் நியமனம்

பிரிட்டன் பிரதமர் அலுவலகத்தின் முக்கிய ஆலோசகராக இந்திய வம்சாவளி கெளதம் ரங்கராஜன் நியமனம்! யார் இவர்?

எழுதியவர் Sekar Chinnappan
Aug 13, 2026
06:16 pm

செய்தி முன்னோட்டம்

பிரிட்டனின் லண்டன் நகரில் உள்ள 10 டவுனிங் ஸ்டிரீட் பிரதமர் அலுவலகத்தில், இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரபல ஊடக நிர்வாகியும் மூலோபாய வல்லுநருமான கெளதம் ரங்கராஜன் முக்கியப் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார். பிரிட்டன் பிரதமர் ஆண்டி பர்ன்ஹாமின் கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டுப் பிரிவுக்கான நிபுணத்துவ ஆலோசகராக பொறுப்பேற்றுள்ள அவர், பிரதமர் அலுவலகத்தின் நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் புதிய செயல்பாட்டு நடைமுறைகள் குறித்து ஆலோசனைகளை வழங்கவுள்ளார்.

கல்வி மற்றும் வேலை

கேம்பிரிட்ஜ் கல்வி மற்றும் 30 ஆண்டுகால பிபிசி பயணம்

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இசையமைப்பில் முதல் வகுப்பில் பட்டம் பெற்ற கெளதம் ரங்கராஜன், பிரிட்டனின் பிரபல பிபிசி ஊடக நிறுவனத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பல்வேறு உயர்பதவிகளில் பணியாற்றியுள்ளார்.

1993 ஆம் ஆண்டு பிபிசி ரேடியோ கிளாசிக்கல் மியூசிக் பிரிவில் தொடக்கநிலை தயாரிப்பாளராகப் பணிகளைத் தொடங்கிய அவர், பிபிசி வேல்ஸ் மற்றும் பிபிசி ரேடியோ 1, 2, 3, 4 உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் முதன்மைத் தயாரிப்பாளராக செயல்பட்டு புகழ்பெற்ற நிகழ்ச்சிகளை உருவாக்கியுள்ளார்.

இயக்குநர் பதவி

பெருநிறுவன உத்தி மற்றும் பிபிசி குழு இயக்குநர் பதவி

2005 முதல் 2009 வரை பிபிசியின் உத்தி மற்றும் கொள்கைத் தலைவராகவும், பின்னர் பிபிசியின் கார்ப்பரேட் உத்தி நெறியாளராகவும் கெளதம் ரங்கராஜன் பணியாற்றினார்.

தொடர்ந்து 2013 முதல் 2025 வரை சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பிபிசி குழுமத்தின் மூலோபாயம் மற்றும் செயல்திறன் தலைவராக பொறுப்பு வகித்து நிறுவனத்தின் ஒட்டுமொத்த உத்திகளையும் வழிநடத்தினார்.

2025 இல் பிபிசியில் இருந்து விலகிய பிறகு, சுயாதீன ஆலோசகராக செயல்பட்டு வந்தார்.

ADVERTISEMENT

அரசு அறிவிப்பு

பிரிட்டன் அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கெளதம் ரங்கராஜனின் புதிய நியமனம் குறித்துப் பிரிட்டன் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள சுருக்கமான அறிவிப்பில், பெருநிறுவன உத்தி மற்றும் நிறுவன மாற்றங்களில் அவருக்கு இருக்கும் பல ஆண்டுகால அனுபவம் அரசு நிர்வாகத்திற்கு பெரிதும் உதவும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இசையமைப்பாளர், பாடகர் மற்றும் குளைண்ட்போர்ன் அறக்கட்டளை டிரஸ்டியாகவும் செயல்பட்டு வரும் கெளதம் ரங்கராஜன், பிரிட்டன் பிரதமரின் புதிய ஆலோசகராக பொறுப்பேற்றுள்ளது உலகளாவிய இந்தியர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ADVERTISEMENT