Page Loader
உலகின் உயரமான கட்டிடத்தில் கம்பீரமாக ஒளிர்ந்த இந்திய தேசியக்கொடி

உலகின் உயரமான கட்டிடத்தில் கம்பீரமாக ஒளிர்ந்த இந்திய தேசியக்கொடி

எழுதியவர் Sekar Chinnappan
Aug 15, 2023
01:29 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் சுதந்திர தினத்தையொட்டி, துபாயில் உள்ள புர்ஜ் கலீஃபா, நமது தேசியக் கொடியின் மூவர்ணங்களால் ஜொலித்தது. இந்திய தேசிய கீதமான 'ஜன கண மன' பின்னணியில் இசைக்க, உலகின் மிக உயரமான புர்ஜ் கலீஃபா கட்டிடம் இந்திய தேசிய கொடியுடன் ஒளிர்வதைக் காட்டும் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பரவி வைரலாகி வருகிறது. முன்னதாக, புர்ஜ் கலீஃபாவில் ஆகஸ்ட் 14 பாகிஸ்தான் சுதந்திர தினத்தை முன்னிட்டு, இரவில் தங்கள் நாட்டு தேசிய கொடி ஒளிர விடப்படும் என்ற நம்பிக்கையில் ஆகஸ்ட் 13 இரவு பாகிஸ்தானியர்கள் பலரும் அங்கு குவிந்திருந்தனர். ஆனால் அங்கு பாகிஸ்தான் தேசியக்கொடி ஒளிரவிடப்படாததால் ஏமாற்றம் அடைந்தனர். துபாயில் வசிக்கும் வெளிநாட்டவர்களில் இந்தியர் மற்றும் பாகிஸ்தானியர் அதிக அளவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

இந்திய தேசிய கொடியின் மூவர்ணங்களால் ஜொலித்த புர்ஜ் கலீஃபா