
அதிர்ச்சி; வாஷிங்டனில் இந்திய தூதரக அதிகாரி மர்ம மரணம்
செய்தி முன்னோட்டம்
அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரக அதிகாரி ஒருவர் மர்மமான முறையில் மிஷன் வளாகத்தில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆழ்ந்த வருத்தத்துடன், இந்திய தூதரகத்தின் உறுப்பினர் ஒருவர் 2024 செப்டம்பர் 18 மாலை காலமானார் என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறோம்." என்று தெரிவித்துள்ளது.
அவரது சடலத்தை இந்தியாவுக்கு விரைவாக மாற்றுவதை உறுதி செய்வதற்காக தொடர்புடைய அனைத்து ஏஜென்சிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பில் இருப்பதாக தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்திய தூதரகம் மேலும், "இறந்தவர் தொடர்பான கூடுதல் விவரங்கள் குடும்பத்தின் தனியுரிமைக்காக வெளியிடப்படவில்லை.
இந்த துயர நேரத்தில் எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் குடும்பத்தினருடன் உள்ளன. உங்கள் புரிதலுக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம்." என்று கூறியது.
இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
இந்திய தூதரகம் அறிக்கை
With deep regret, we wish to confirm that a member of the Embassy of India passed away on the evening of 18th September 2024. We are in touch with all relevant agencies and members of the family to ensure the swift transfer of the mortal remains to India. Additional details… pic.twitter.com/sY3qoxJj4b
— ANI (@ANI) September 20, 2024