NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / அமெரிக்காவில் இந்திய மாணவரை அடித்து நொறுக்கிய கும்பல்: அமைச்சர் ஜெய்சங்கரிடம் உதவி கோரி கடிதம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    அமெரிக்காவில் இந்திய மாணவரை அடித்து நொறுக்கிய கும்பல்: அமைச்சர் ஜெய்சங்கரிடம் உதவி கோரி கடிதம் 

    அமெரிக்காவில் இந்திய மாணவரை அடித்து நொறுக்கிய கும்பல்: அமைச்சர் ஜெய்சங்கரிடம் உதவி கோரி கடிதம் 

    எழுதியவர் Sindhuja SM
    Feb 07, 2024
    09:55 am

    செய்தி முன்னோட்டம்

    அமெரிக்காவின் சிகாகோவில் இந்திய மாணவர் ஒருவரை ஆயுதம் ஏந்திய நபர்கள் தாக்கி அவரது செல்போனை கொள்ளையடித்துச் சென்றனர்.

    இந்நிலையில், இந்திய அரசு தலையிட்டு அவருக்கு முறையான மருத்துவச் சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    ஹைதராபாத்தை சேர்ந்த சையது மசாஹிர் அலி, சிகாகோவில் உள்ள இண்டியானா வெஸ்லியன் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் படித்து வருகிறார்.

    பிப்ரவரி 4 அன்று, அவரது வெஸ்ட் ரிட்ஜ் குடியிருப்பின் அருகே ஆயுதமேந்திய கொள்ளையர்களால் அவர் தாக்கப்பட்டார்.

    அலி வீட்டிற்குச் செல்லும் போது நான்கு பேர் தன்னைத் தாக்கியதாக கூறி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

    அமெரிக்கா 

    கவலையில் அலியின் மனைவி மற்றும் மூன்று மைனர் குழந்தைகள்

    "நான் உணவை வாங்கி கொண்டு வீட்டிற்குச்சென்று கொண்டிருந்த போது, ​​​​நான்கு பேர் என்னை உதைத்து, குத்திவிட்டு, என் தொலைபேசியுடன் ஓடிவிட்டனர். தயவுசெய்து எனக்கு உதவுங்கள்" என்று அலி அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

    இந்த தாக்குதலில் அலிக்கு பல வெட்டுக்கள் மற்றும் காயங்கள் ஏற்பட்டன.

    மற்றொரு சிசிடிவி வீடியோவில், தாக்குதல்காரர்களிடம் இருந்து தன்னை காப்பற்றிக்கொள்ள அலி தெருவில் ஓடுவது பதிவாகியுள்ளது.

    "அவர்கள் என் கண்ணில் குத்தினார்கள். அவர்கள் என் முகத்தில், என் விலா எலும்பில், என் முதுகில் கால்களால் உதைத்தார்கள்," என்று அலி வைரலாகும் வீடியோவில் கூறியுள்ளார்.

    ஹைதராபாத்தில் உள்ள அலியின் மனைவி மற்றும் மூன்று மைனர் குழந்தைகள் அடங்கிய அவரது குடும்பம் அவரது நலன் குறித்த ஆழ்ந்த கவலையில் உள்ளனர்.

    அமெரிக்கா 

    சிகாகோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் வெளியிட்ட அறிக்கை 

    அவரது மனைவி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை தொடர்புகொண்டு, அமெரிக்கா செல்ல உதவி கோரியுள்ளார்.

    சிகாகோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம், அலி மற்றும் அவரது மனைவியுடன் தொடர்பில் இருப்பதாகவும், இந்த விஷயத்தில் சாத்தியமான அனைத்து உதவிகளையும் அவர்களுக்கு செய்ய உறுதியளித்துள்ளதாகவும் கூறியுள்ளது.

    சிகாகோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் இது குறித்த ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

    அந்த அறிக்கையில், "இந்தியாவில் உள்ள சையத் மசாஹிர் அலி மற்றும் அவரது மனைவி சையது ருக்கியா பாத்திமா ரஸ்வி ஆகியோருடன் துணைத் தூதரகம் தொடர்பில் உள்ளது. சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக உறுதியளித்துள்ளது. இந்த வழக்கை விசாரித்து வரும் உள்ளூர் அதிகாரிகளையும் துணைத் தூதரகம் தொடர்பு கொண்டுள்ளது." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    இந்தியா
    எஸ்.ஜெய்சங்கர்

    சமீபத்திய

    பாகிஸ்தான் சூப்பர் லீக் காலவரையறை இன்றி நிறுத்ததி வைப்பதாக அறிவித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட்
    பஞ்சாபின் ஃபிரோஸ்பூரில் பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்; மூன்று பேருக்கு காயம் பஞ்சாப்
    ஸ்ரீநகர் விமான நிலையத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் முயற்சி? பாதுகாப்புப்படை எதிர் நடவடிக்கை ஜம்மு காஷ்மீர்
    இந்தியாவிற்குள் அத்துமீறி ஊடுருவிய பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்புப்படை இந்தியா

    அமெரிக்கா

    பயனாளர்கள் தனியுரிமை தொடர்பாக வழக்கில் தீர்வு காணவிருக்கும் கூகுள் கூகுள்
    சீன உளவு பலூன் அதன் இருப்பிடத்தைத் தெரிவிக்க அமெரிக்க இணைய சேவையை பயன்படுத்தியது- தகவல் சீனா
    $5 மில்லியன் மதிப்பிலான அமெரிக்க மாளிகையில் இறந்து கிடந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த குடும்பம்  கொலை
    H-1B விசா உட்பட பல்வேறு அமெரிக்கா விசாக்களுக்கான பிரீமியம் கட்டணம் 12% உயர்வு விசா

    இந்தியா

    இந்தியாவில் மேலும் 313 பேருக்கு கொரோனா பாதிப்பு கொரோனா
    'இந்தியா-மியான்மர் எல்லையில் வேலி அமைக்க மத்திய அரசு திட்டம்': அமித் ஷா மியான்மர்
    இந்திய விமானத்திற்கு மாலத்தீவு அதிபர் அனுமதி மறுத்ததால் நோய்வாய்ப்பட்ட சிறுவன் பலி  மாலத்தீவு
    அயோத்தி ராமர் கோவில் விழாவிற்காக அறிவிக்கப்பட்ட அரை நாள் விடுமுறை முடிவை திரும்ப பெற்றது டெல்லி எய்ம்ஸ்  டெல்லி

    எஸ்.ஜெய்சங்கர்

    "இளநிலைப் பட்டதாரிகளை வரவேற்கிறோம்": விசா விதி மாற்றங்கள் குறித்து பேசிய இங்கிலாந்து அமைச்சர்  உலகம்
    கனடாவில் நடந்த இந்திரா காந்தியின் படுகொலை கொண்டாட்டம்: இந்திய தலைவர்கள் கடும் எதிர்ப்பு  இந்தியா
    கனடாவை விட்டு வெளியேற்றப்படும் இந்திய மாணவர்கள்: என்ன நடக்கிறது  கனடா
    10 ராஜ்யசபா இடங்களுக்கு ஜூலை 24ம் தேதி தேர்தல்  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025