"மனிதநேயம் ஒருபோதும் மோதல்களுக்குப் பலியாகக் கூடாது!": காசா அமைதி திட்டத்திற்கு பிரதமர் மோடி ஆதரவு
செய்தி முன்னோட்டம்
இஸ்ரேல் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் இணைந்து கூட்டாகச் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது காசா விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை அவர் மீண்டுமொருமுறை உறுதிப்படுத்தினார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய பிரதமர் மோடி, "எந்தவொரு மோதலுக்கும் மனிதநேயம் பலியாகிவிடக் கூடாது என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் (UNSC) அங்கீகரித்துள்ள 'காசா அமைதித் திட்டம்' இப்பகுதியில் நிலையான அமைதியை ஏற்படுத்த ஒரு சிறந்த வழியாகும். இந்தத் திட்டத்திற்கு இந்தியா தனது முழு ஆதரவைத் தெரிவிக்கிறது," என்று கூறினார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Addressing the joint press meet with PM Netanyahu.@netanyahu https://t.co/4BUYaXc8G7
— Narendra Modi (@narendramodi) February 26, 2026
தீர்வு
பாலஸ்தீன பிரச்சினைக்கு தீர்வு
அமைதிக்கான பாதை எப்போதும் எளிதானது அல்ல என்று குறிப்பிட்ட பிரதமர், பாலஸ்தீன பிரச்சினை உள்ளிட்ட பிராந்தியத்தின் அனைத்து சிக்கல்களுக்கும் நீதி மற்றும் நீடித்த அமைதி கிடைக்க இந்தியா தொடர்ந்து சர்வதேச சமூகத்துடன் இணைந்து பணியாற்றும் என்று தெரிவித்தார். பயங்கரவாதம் குறித்துப் பேசிய மோடி, "இந்தியா மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளுமே பயங்கரவாதத்தை எந்த வடிவத்திலும் ஏற்காது என்பதில் தெளிவாக உள்ளன. உலகில் எங்கு பயங்கரவாதம் நடந்தாலும் அது உலக அமைதிக்கு அச்சுறுத்தலாகும். பயங்கரவாதம் மற்றும் அதை ஆதரிப்பவர்களுக்கு எதிராக எங்களது போராட்டம் தொடரும்," என்று கூறினார்.