'ஈரான் ஒழுங்கா நடக்காட்டி குண்டு போடுவோம்': ஒப்பந்தம் கையெழுத்தாகும் முன் டிரம்ப் மிரட்டல்
செய்தி முன்னோட்டம்
ஸ்விட்சர்லாந்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே அதிகாரப்பூர்வ அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாக இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், பிரான்சில் நடைபெறும் ஜி7 (G7) உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது வழக்கமான பாணியில் ஈரானுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இறுதியானது அல்ல என்றும், ஈரான் ஒழுங்காக நடந்து கொள்ளாவிட்டால் மீண்டும் அந்நாட்டின் மீது குண்டுமழை பொழிய தயங்க மாட்டோம் என்றும் டிரம்ப் டிரம்ப் தெரிவித்துள்ளது உலக நாடுகளை மீண்டும் பதட்டத்தில் ஆழ்த்தியள்ளது.
தாக்குதல்
"ஒழுங்கா நடக்காட்டி தலையிலேயே குண்டு விழும்": டிரம்ப் மிரட்டல்
மத்திய கிழக்கு நாடுகளை உலுக்கி வரும் போரை முடிவுக்குக் கொண்டு வர இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ள சூழலில், இந்த ஒப்பந்தத்தின் தன்மையை டிரம்பின் பேச்சு வெளிப்படுத்தியுள்ளது. இது குறித்துப் பேசிய அவர், "இது வெறும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மட்டுமே, இறுதியானது அல்ல. எனக்கு இந்த ஒப்பந்தம் பிடிக்கவில்லை என்றாலோ, அல்லது ஈரான் ஒழுங்காக நடந்து கொள்ளத் தவறினாலோ, நாங்கள் உடனடியாக அவர்களின் தலையின் நடுப்பகுதியிலேயே துல்லியமாகக் குண்டுகளை வீசும் ராணுவத் தாக்குதலுக்குத் திரும்புவோம்". "ஏனெனில் அவர்கள் கடந்த 47 ஆண்டுகளாக அப்படித்தான் தவறாக நடந்து கொள்கிறார்கள்" என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
BREAKING: "If I don't like it, we'll go back to shooting at them, dropping bombs on their head."
— Fox News (@FoxNews) June 17, 2026
President Trump warns Iran that any change to the peace agreement or failure to comply could bring an immediate military response.
"If they don't behave, we'll go right back to… pic.twitter.com/67JRcDptYS
பெருமிதம்
உலகளாவிய பொருளாதார மந்தநிலையைத் தடுத்ததாகப் பெருமிதம்
ஈரான் உடனான இந்த பேச்சுவார்த்தை மூலம் உலகளாவிய பெரும் பொருளாதார மந்தநிலையை தான் தடுத்து நிறுத்தியுள்ளதாக டிரம்ப் உரிமை கோரியுள்ளார். மேலும், போரைத் தொடர விரும்பிய சில "அறிவற்ற மனிதர்களின்" ஆலோசனைகளை நிராகரித்து இந்த உடன்பாட்டை எட்டியதாகக் குறிப்பிட்ட அவர், அவர்கள் யார் என்பதைப் பகிரங்கமாக வெளிப்படுத்தவில்லை. அத்துடன், சர்வதேச எரிசக்தி வர்த்தகத்தின் முக்கியப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி தற்போது ஓரளவு திறக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த ஓரிரு நாட்களில் அது முழுமையாகத் திறக்கப்படும் என்றும் டிரம்ப் கூறினார்.
நிதி
$300 பில்லியன் மறுசீரமைப்பு நிதி வதந்திக்கு முற்றுப்புள்ளி
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே எட்டப்பட்டுள்ள 60 நாள் தற்காலிகப் போர் நிறுத்தம் மற்றும் ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்குவது தொடர்பான இடைக்கால ஒப்பந்தத்தின் கசிந்த நகலில், ஈரானின் மறுசீரமைப்புப் பணிகளுக்காக அமெரிக்கா 300 பில்லியன் டாலர் நிதி வழங்கும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த தகவலை முற்றிலுமாக மறுத்துள்ள அதிபர் டிரம்ப், "நாங்கள் ஈரானுக்கு 10 காசுகள் கூட வழங்கப் போவதில்லை. அங்கு நாங்கள் எந்த முதலீடும் செய்யவில்லை, அதற்கென எந்தத் தனி நிதியும் எங்களிடம் இல்லை" என்று கூறி அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.