Page Loader
புதிய ஜெர்மன் அதிபராக தேர்வானார் பிரீட்ரிக் மெர்ஸ்; யார் அவர்?
ஜெர்மனியின் பழமைவாதத் தலைவர் பிரீட்ரிக் மெர்ஸ் நாட்டை வழிநடத்த உள்ளார்

புதிய ஜெர்மன் அதிபராக தேர்வானார் பிரீட்ரிக் மெர்ஸ்; யார் அவர்?

எழுதியவர் Venkatalakshmi V
Feb 24, 2025
08:02 am

செய்தி முன்னோட்டம்

ஜெர்மனியின் பொதுத் தேர்தலில் ஓலாஃப் ஸ்கோல்ஸின் மைய-இடது சமூக ஜனநாயகக் கட்சியை (SPD) தோற்கடித்து, அவரது கட்சியான கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியம், அதிகளவு வாக்குகளைப் பெற்றதை அடுத்து, ஜெர்மனியின் பழமைவாதத் தலைவர் பிரீட்ரிக் மெர்ஸ் நாட்டை வழிநடத்த உள்ளார். ஜெர்மன் ஒளிபரப்பாளரான ARD இன் படி, அவரது கட்சியான கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியம் (CDU) மற்றும் கிறிஸ்தவ சமூக ஒன்றியம் (CSU) ஆகியவற்றை உள்ளடக்கிய பிரீட்ரிக் மெர்ஸ் தலைமையிலான கூட்டணி 28.5 சதவீத வாக்குகளைப் பெற்றது. அதைத் தொடர்ந்து ஜெர்மனியின் தீவிர வலதுசாரி ஜெர்மனிக்கான மாற்று (AfD) 20.7 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது.

விவரங்கள்

ஃபிரெட்ரிக் மெர்ஸ் யார்?

நவம்பர் 11, 1955 அன்று பிறந்த மெர்ஸ், சட்டப் பயிற்சியில் வலுவான பின்னணியைக் கொண்ட ஒரு குடும்பத்தில் இருந்து வருகிறார். மெர்ஸ் 1976இல் சட்டம் படிக்கத் தொடங்கினார், இருப்பினும், அவர் 1972 முதல் CDU இன் ஒரு பகுதியாக இருந்து வருகிறார். இருப்பினும், 1989இல் தான் அவர் ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் 1994இல், ஹோட்சாவர்லேண்ட்க்ரீஸ் தொகுதியில் முழுமையான பெரும்பான்மையைப் பெற்ற பிறகு, ஜெர்மன் கூட்டாட்சி நாடாளுமன்றமான பன்டெஸ்டாக்கிற்குச் சென்றார். அவர் CDU-வில் முக்கிய பதவிகளை வகித்தார். மேலும் 2000ஆம் ஆண்டில் கட்சியின் நாடாளுமன்றத் தலைவரானார். இருப்பினும், 2002ஆம் ஆண்டில் அவர் அந்தப் பதவியை ஏஞ்சலா மெர்க்கலுக்கு விட்டுக்கொடுத்தார். 2022ஆம் ஆண்டில், அவர் கட்சியின் ஆட்சியை ஏற்றுக்கொண்டு CDU இன் தேசியத் தலைவரானார்.