சுற்றுலாவிற்கு ஆஸ்திரேலியா சென்ற 4 இந்தியர்கள் கடலில் மூழ்கி உயிரிழப்பு
செய்தி முன்னோட்டம்
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள பிலிப் தீவு கடற்கரையில் மூழ்கி நான்கு இந்தியர்கள் இறந்ததாக கான்பெராவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் வியாழக்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இறந்தவர்களில் மூவர் பெண்கள் மற்றும் ஒருவர் ஆண் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்கள் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், விடுமுறையை கொண்டாடுவதற்காக அவர்கள் ஆஸ்திரேலியா சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள பதிவில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிப்பதாகவும், அவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிலிப் தீவின் தென்மேற்கு கடற்கரையில் உள்ள பாரஸ்ட் குகைகளுக்கு அருகில், இறந்துபோன நால்வரும், "காவல்துறை இல்லாத" கடற்கரையில் நீந்திக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள்
சம்பவ இடத்திலேயே உயிரிழந்த மூவர்
ஆஸ்திரேலியா நேரப்படி இன்று மாலை 3:30 மணியளவில் காவல்துறையினருக்கு அவசர அழைப்பு கிடைத்ததாகவும், தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு சென்று விரைந்த மீட்புக்குழுவினர், கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த நபர்களை மீட்டுள்ளனர்.
தண்ணீரில் இருந்து அவர்களை இழுத்த பிறகு, நான்கு பேருக்கும் CPR வழங்கப்பட்டது எனவும், ஆனால் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர் எனவும் கூறப்பட்டுள்ளது.
ஒரு நபர், விமானம் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
எனினும், சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தி கார்டியனின் கூற்றுப்படி, இறந்து போனவர்களில் மூன்று பெண்களில் இருவர் 20 வயதுடையவர்கள், அந்த ஆணுக்கு 40 வயது