கனடா வரலாற்றில் முதல்முறையாக ஆயுதப்படைக்கு தலைமை தாங்கும் ஒரு சிங்க பெண்!
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின், மூத்த பணிகளுக்கு பெண்களை நியமிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, முதல் முறையாக ஒரு பெண்ணை நாட்டின் உயர் ராணுவ வீரராக அறிவித்துள்ளார். லெப்டினன்ட்-ஜெனரல் ஜென்னி கரிக்னன், ஆயுதப்படைகளில் வேரூன்றி உள்ள பாலின பாகுபாடு மற்றும் தவறான நடத்தைகளை ஒழிப்பதற்கான முயற்சிகளுக்குப் பொறுப்பவார். இவர், ஜூலை-18 அன்று பாதுகாப்பு ஊழியர்களின் தலைவராக பொறுப்பேற்கிறார். கரிக்னன், ஆரம்பகாலத்தில் இராணுத்தில் பொறியியாளராக இணைந்தார். அவர் தனது 35 ஆண்டுகால இராணுவ பணியில், ஆப்கானிஸ்தான், போஸ்னியா-ஹெர்சகோவினா, ஈராக் மற்றும் சிரியாவில் துருப்புகளை வழிநடத்தியுள்ளார். "அவரது வாழ்க்கையில், அவரது விதிவிலக்கான தலைமைத்துவ குணங்கள், சிறந்து விளங்குவதற்கான அர்ப்பணிப்பு மற்றும் சேவைக்கான அர்ப்பணிப்பு ஆகியவை எங்கள் ஆயுதப்படைகளுக்கு மிகப்பெரிய சொத்தாக இருந்தன" என்று ட்ரூடோ தெரிவித்துள்ளார்.