உபர் டிரைவராக பணியாற்றுபவர் ₹1,450 கோடி சொத்துக்கு சொந்தக்காரரா! ஷாக் ஆன தொழில்முனைவோர்
செய்தி முன்னோட்டம்
இந்தியத் தொழில்முனைவோர் நவ் ஷா, ஃபியூஜியில் உபர் காரில் மேற்கொண்ட ஒரு சாதாரணப் பயணம், வாழ்க்கையின் உண்மையான வெற்றி மற்றும் மனிதநேயம் குறித்த மறக்க முடியாத பாடமாக மாறியுள்ளது. 86 வயதான அந்த உபர் ஓட்டுநரின் அமைதியான தோற்றத்திற்குப் பின்னால் ஒரு வியத்தகு வாழ்க்கை மறைந்திருந்தது. "உங்களுடைய கட்டணங்களை எப்படிச் செலுத்துகிறீர்கள்?" என்று நவ் ஷா கேட்டபோது, அந்த முதியவர், "நான் ஒரு தொழிலதிபர், என்னுடைய நிறுவனம் ₹1,450 கோடி வருவாய் ஈட்டுகிறது" என்று பதிலளித்துள்ளார். இது நவ் ஷாவை அதிர்ச்சியடைய வைத்தது. தொடர்ந்து நடந்த உரையாடலில், அவர் கடந்த பத்து ஆண்டுகளாக, தன்னுடைய உபேர் வருமானத்தில் இருந்து மட்டும், ஒவ்வொரு ஆண்டும் 24 பெண் பிள்ளைகளின் கல்விச் செலவை ஏற்றுவருவதாகத் தெரிவித்துள்ளார்.
கல்வி
கல்விக்கு உதவி
அவர், "எனக்கு மூன்று மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு நல்ல கல்வி அளித்து, நன்றாக வாழ்கிறார்கள். என்னால் மற்றப் பெண் பிள்ளைகளின் கனவுகளை அடைய உதவ முடியும் என்றால், ஏன் செய்யக்கூடாது?" என்று புன்னகையுடன் கூறியுள்ளார். அவர், "நாங்கள் 13 நகைக்கடைகள், ஆறு உணவகங்கள், ஒரு உள்ளூர் நாளிதழ் மற்றும் நான்கு பல்பொருள் அங்காடிகளைச் சொந்தமாக வைத்திருக்கிறோம்" என்று தெரிவித்தார். நவ் ஷா இந்தச் சந்திப்பைச் சமூக ஊடகங்களில் பகிர்ந்து, "எல்லாவற்றையும் பார்த்த ஒரு மனிதர், இன்னும் இரக்கம் மற்றும் நோக்கத்துடன் இருக்கிறார். நீங்கள் எவ்வளவு உயரத்தில் ஏறுகிறீர்கள் என்பதல்ல உண்மையான வெற்றி. வழியில் எத்தனைப் பேரைத் தூக்கி விடுகிறீர்கள் என்பதே வெற்றி என்று அவர் எனக்கு நினைவூட்டினார்." என்று குறிப்பிட்டுள்ளார்.