LOADING...
துபாய் விமான நிலையம் அருகே ட்ரோன் தாக்குதல்: விமான சேவைகள் பாதிப்பு
இன்று காலை நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

துபாய் விமான நிலையம் அருகே ட்ரோன் தாக்குதல்: விமான சேவைகள் பாதிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Mar 16, 2026
08:14 am

செய்தி முன்னோட்டம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு (DXB) மிக அருகாமையில் இன்று காலை நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் அங்கிருந்த ஒரு எரிபொருள் கிடங்கு தீ பற்றி எரியத் தொடங்கியதை அடுத்து, பாதுகாப்பு கருதி விமான நிலையத்தின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. விமான நிலையத்தின் எல்லைப்பகுதியில் உள்ள எரிபொருள் தொட்டி ஒன்றைக் குறிவைத்து இந்த ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் துபாய் ஊடக அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது. தகவலறிந்து விரைந்து வந்த சிவில் டிஃபென்ஸ் குழுவினர், தீயை கட்டுக்குள் கொண்டுவரும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதிர்ஷ்டவசமாக, இந்த விபத்தில் இதுவரை உயிரிழப்புகளோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடரும் பதற்றம்

மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம்

கடந்த பிப்ரவரி 28 அன்று ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதை தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளுக்கும் ஈரானுக்கும் இடையே போர் மூண்டுள்ளது. இதற்கு பதிலடியாக, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கப் படைத்தளங்கள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகள் மீது இதுவரை 2,000-க்கும் மேற்பட்ட ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் இலக்கு வைக்கப்படுவது சர்வதேச அளவில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. உலகின் பரபரப்பான போக்குவரத்து மையங்களில் ஒன்றான துபாயில் ஏற்பட்டுள்ள இந்தத் தடை, சர்வதேச வான்வழி போக்குவரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement