துருக்கியில் பூகம்பத்திற்கு முன் மற்றும் பூகம்பத்திற்கு பின் எடுக்கப்பட்ட ட்ரோன் வீடியோ வைரல்
வரலாறு காணாத பூகம்பத்தை சந்தித்த துருக்கி நாட்டில் எடுக்கப்பட்ட "பூகம்பதிற்கு முன் மற்றும் பூகம்பத்திற்கு பின்" ட்ரோன் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. இந்த பூகம்பத்தால் துருக்கி மற்றும் சிரியாவில் 37,000க்கும் அதிகமான மக்கள் இறந்துள்ளனர். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட தெற்கு துருக்கியின் பரந்த நிலப்பரப்பில் இருந்து 158,000க்கும் அதிகமான மக்கள் வெளியேறியுள்ளனர். துருக்கி ஒரு மிகபெரும் பூகம்ப மண்டலத்தில் அமைந்திருப்பதால் அங்கு இப்படிப்பட்ட நில நடுக்கங்கள் ஏற்படுவது புதிதல்ல. 1999இல், இஸ்தான்புல் அருகே 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில், 18,000 பேர் கொல்லப்பட்டனர். 1939இல் 33,000 பேரைக் கொன்ற எர்சின்கானின் நிலநடுக்கத்தை அடுத்து கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு துருக்கியில் ஏற்படும் மிக மோசமான நிலநடுக்கம் இதுவாகும்.