LOADING...
'ஹார்முஸ் நீரிணை இனி என் பெயரில்!' அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ட்வீட்
ஹார்முஸ் நீரிணையை தனது பெயரில் சித்தரிக்கும் வரைபடத்தைப் பகிர்ந்த டிரம்ப்

'ஹார்முஸ் நீரிணை இனி என் பெயரில்!' அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ட்வீட்

எழுதியவர் Venkatalakshmi V
Apr 30, 2026
09:23 am

செய்தி முன்னோட்டம்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்களுக்கு இடையே, உலகளாவிய கச்சா எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய வழித்தடமான 'ஹார்முஸ் நீரிணை' (Strait of Hormuz) என்பதைத் தனது பெயரில் 'டிரம்ப் நீரிணை' (Strait of Trump) என மாற்றியமைக்க வேண்டும் என்ற பதிவை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார். ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளதாக அவர் அறிவித்ததைத் தொடர்ந்து இந்தச் செய்தி வெளியாகியுள்ளது. தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் ஹார்முஸ் நீரிணையை தனது பெயரில் சித்தரிக்கும் வரைபடத்தைப் பகிர்ந்த டிரம்ப், ஈரானுக்கு எதிரான இந்த முற்றுகை ஒரு ஜீனியஸ் நடவடிக்கை என்று வர்ணித்துள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

முற்றுகை

முற்றுகை குறித்து டிரம்ப் பெருமிதம்

கடற்படை முற்றுகை குறித்து பேசிய டிரம்ப், "அமெரிக்கக் கடற்படையின் முற்றுகை 100% பாதுகாப்பானது மற்றும் குறைபாடற்றது. இது நமது ராணுவத்தின் வலிமையைக் காட்டுகிறது" என்று பெருமிதத்துடன் கூறினார். "ஈரான் தனது அணு ஆயுதக் கனவுகளைக் கைவிடும் வரை எந்தவொரு உடன்பாடும் எட்டப்படாது. ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். உலகின் தலைசிறந்த ராணுவத்தை நாம் கொண்டுள்ளோம். யாரும் எங்களிடம் விளையாட முடியாது" என்றும் கூறினார்.

Advertisement

விமர்சனம்

"பன்றி திணறுவது போல ஈரான் திணறுகிறது"

ஆக்சியோஸ் ஊடகத்திற்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில், குண்டுவீச்சை விட இந்தப் பொருளாதார மற்றும் கடற்படை முற்றுகையே ஈரானை நிலைகுலையச் செய்துள்ளதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். "முற்றுகையால் அவர்கள் ஒரு பன்றியைப் போலத் திணறிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நிலைமை இன்னும் மோசமாகும்," என டிரம்ப் தனது பாணியில் கடுமையாக விமர்சித்துள்ளார். முதலில் முற்றுகையை நீக்கினால் தான் பேச்சுவார்த்தை என ஈரான் வைத்த நிபந்தனையையும் அவர் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.

Advertisement

அதிர்வு

சர்வதேச அரங்கில் எழுந்துள்ள அதிர்வுகள்

டிரம்பின் இந்தப் பேச்சு சர்வதேச சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடைகள் காரணமாக உலகளவில் எரிசக்தி விலை உயர்ந்துள்ளது. ஈரானோ, ஹார்முஸ் நீரிணையின் மீதான தனது கட்டுப்பாட்டை விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை எனத் தெரிவித்துள்ளதால், ஒரு பெரிய நேரடி ராணுவ மோதல் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம் என்ற அச்சம் நிலவுகிறது. சர்வதேச அரசியல் களத்தில் டிரம்பின் இந்த "பெயர் மாற்ற" அதிரடி மற்றும் ஈரானுடனான போர் குறித்த தகவல்கள் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளன. எரிசக்தி பாதுகாப்பிற்காகப் பல நாடுகளும் அமெரிக்காவின் அடுத்தகட்ட நகர்வுகளை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.

Advertisement