LOADING...
"இனி போர்நிறுத்தம் இல்லை": ஈரான் மீதான தாக்குதலுக்குப் பின் டொனால்ட் டிரம்ப் ஆவேசப் பேச்சு
ஈரான் மீதான தாக்குதலுக்குப் பின் டொனால்ட் டிரம்ப் ஆவேசப் பேச்சு

"இனி போர்நிறுத்தம் இல்லை": ஈரான் மீதான தாக்குதலுக்குப் பின் டொனால்ட் டிரம்ப் ஆவேசப் பேச்சு

எழுதியவர் Venkatalakshmi V
Jul 08, 2026
02:55 pm

செய்தி முன்னோட்டம்

துருக்கி தலைநகர் அங்காராவில் நடைபெற்று வரும் நேட்டோ உச்சிமாநாட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் அரசுக்கு எதிராகவும் அதன் தலைவர்கள் குறித்தும் மிகவும் கடுமையான கருத்துக்களை பகிர்ந்துள்ளார். ஹார்முஸ் நீரிணையில் மூன்று வணிகக் கப்பல்கள் தாக்கப்பட்டதற்கு பதிலடியாக, நேற்று இரவு அமெரிக்க ராணுவம் ஈரானின் ராணுவ தளங்கள் மீது நடத்திய கொடூரமான வான்வழித் தாக்குதலை தொடர்ந்து டிரம்ப் இந்த ஆவேச உரையை நிகழ்த்தியுள்ளார். ஈரான் உடனான தற்காலிகப் போர் நிறுத்தம் தனக்கு முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவித்த டிரம்ப், இனிமேல் அவர்களுடன் எந்தவொரு உடன்படிக்கையையும் செய்ய அமெரிக்கா தயாராக இல்லை என்பதைத் திட்டவட்டமாகக் கூறினார்.

சாடல்

"அவர்கள் ஏமாற்றுக்காரர்கள்": டிரம்ப் சாடல்

செய்தியாளர் சந்திப்பில் அதிபர் டொனால்ட் டிரம்ப், "ஈரானியர்கள் அனைவரும் பொய்யர்கள், ஏமாற்றுக்காரர்கள் மற்றும் மனநோயாளிகள். அவர்கள் தங்களின் சொந்த நாட்டு மக்களையே சித்திரவதை செய்து அழித்து வருகிறார்கள்". "ஈரானில் தற்போதைய அரசுக்கு எதிராகப் போராடிய 54,000-க்கும் மேற்பட்ட மக்களை அவர்கள் கொன்று குவித்துள்ளனர். மக்கள் ஏன் இன்னும் அந்த அரசை வீழ்த்தவில்லை என்று கேட்கிறார்கள்? அவர்கள் எப்படி வீழ்த்துவார்கள், போராடிய அனைவரும் தற்பொழுது உயிருடன் இல்லையே, அவர்கள் கொல்லப்பட்டுவிட்டனர்" என்றார்.

"அவர்கள் தீயவர்கள்"

"அவர்கள் தீயவர்கள்": 

மேலும் பேசிய டிரம்ப், "நேற்று இரவு ஈரானில் உள்ள மிக ஆபத்தான மனிதர்களைக் குறிவைத்து நாங்கள் மிகவும் சக்திவாய்ந்த தாக்குதலை நடத்தியுள்ளோம். அவர்களிடம் ஏதோ பெரிய கோளாறு இருக்கிறது". "அவர்கள் அழுக்கு பிளேயர்கள் (Dirty players), எல்லோரையும் தாக்க நினைக்கிறார்கள்; ஒருவேளை என்னையும் அவர்கள் குறிவைக்கலாம். எங்களுக்கு அவர்களைப் பிடிக்காது, எனக்கும் அவர்களைப் பிடிக்காது. அவர்கள் தீயவர்கள்" என்று மிக ஆக்ரோஷமாகத் தனது வெறுப்பை வெளிப்படுத்தினார்.

Advertisement

அணுஆயுதம்

"ஈரானை அணுஆயுதமற்ற நாடாக்குவோம்"

அமெரிக்கா - ஈரான் இடையேயான இந்த நீண்ட கால மோதலின் இறுதி இலக்கு என்ன என்பதையும் டிரம்ப் தற்பொழுது தெளிவுபடுத்தியுள்ளார். ஈரான் தொடர்ந்து சர்வதேச விதிகளை மீறி அணுஆயுதங்களை உருவாக்க முயல்வதைத் தடுத்து நிறுத்துவதே தங்களின் முதன்மை நோக்கம் என்று குறிப்பிட்ட டிரம்ப், "எங்களது இறுதி இலக்கு ஈரானை முழுமையாக அணுஆயுதமற்ற நாடாக (Denuclearisation) மாற்றுவதுதான். அதை நாங்கள் செய்தே தீருவோம்"என்று முழங்கினார். அமெரிக்க அதிபரின் இந்த வெளிப்படையான ஆக்ரோஷப் பேச்சு, கடந்த சில வாரங்களாக நிலவி வந்த தற்காலிக அமைதிப் பேச்சுவார்த்தைகளை முற்றிலுமாக முடக்கியுள்ளதுடன், மத்திய கிழக்கு பகுதியில் மீண்டும் ஒரு முழு அளவிலான உலகப்போர் மூள்வதற்கான சூழலை உருவாக்கியுள்ளது.

Advertisement