Loading...
மூளை போன்ற மண்டை ஓடு! 11 மாத போராட்டத்திற்குப் பின் இளைஞருக்கு வெற்றி கரமான பிளாஸ்டிக் சர்ஜரி!
மூளையைப் போன்ற அபூர்வமான கியூடிஸ் வெர்டிசிஸ் கைரேட்டா நோயால் பாதிக்கப்பட்ட சீன வாலிபருக்கு அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் புதுவாழ்வு அளித்துள்ளனர்.

மூளை போன்ற மண்டை ஓடு! 11 மாத போராட்டத்திற்குப் பின் இளைஞருக்கு வெற்றி கரமான பிளாஸ்டிக் சர்ஜரி!

எழுதியவர் Vasuki
Jul 26, 2026
04:38 pm

செய்தி முன்னோட்டம்

மண்டைப் பகுதித் தோல் வழக்கத்திற்கு மாறாகத் தடித்து, மனித மூளையின் மேற்பரப்பைப் போன்ற ஆழமான மடிப்புகளை உருவாக்கும் அரிய நோயால் பாதிக்கப்பட்ட 23 வயது சீன இளைஞருக்குப் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் வெற்றிகரமாகத் தீர்வை அளித்துள்ளனர். மத்திய சீனாவின் ஹூனான் மாகாணத்தை சேர்ந்த லி என்ற இளைஞர், வுஹான் பல்கலைக்கழகத்தில் உள்ள ஜோங்னான் மருத்துவமனையில் இந்த சிக்கலான மறுசீரமைப்பு சிகிச்சையைப் பெற்றுள்ளார்.

11 மாதங்கள் நீடித்த சிகிச்சை முறை

'கியூடிஸ் வெர்டிசிஸ் கைரேட்டா' என்றால் என்ன?

மருத்துவர்கள் இவருக்கு 'கியூடிஸ் வெர்டிசிஸ் கைரேட்டா' என்ற அரிய தோல் நோயைக் கண்டறிந்தனர்.

இதில் மண்டையின் தோல் பகுதி தடித்து, பெரிய மடிப்புகளாக மாறும். இது பிறவிக் குறைபாடு அல்ல என்றும், இதற்கான துல்லியமான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

14 வயதிற்குள் இந்த பாதிப்பு லியின் மண்டை பகுதியில் பாதிக்கும் மேல் பரவி, அவரது தோற்றத்தைப் பெரிதும் பாதித்து மன உளைச்சலுக்கு ஆளாக்கியது.

முன்னதாக பல மருத்துவமனைகளில் செய்யப்பட்ட சிகிச்சைகள் தோல்வியடைந்து வடுக்கள் ஏற்பட்ட நிலையில், டாக்டர் சோவெய் தலைமையிலான பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள் இரண்டு கட்டங்களாக சிகிச்சையைத் திட்டமிட்டனர்.

11 மாதங்களாக சிறுகச் சிறுக திரவத்தைச் செலுத்தி, ஆரோக்கியமான தோலை மெல்ல மெல்ல விரிவடையச் செய்தனர்.

மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை

இயல்பு நிலைக்கு திரும்பிய வாழ்க்கை

போதுமான அளவு புதிய ஆரோக்கியமான தோல் உருவானதும், சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சையின் மூலம் பாதிக்கப்பட்ட மூளை போன்ற தோல் பகுதிகள் அகற்றப்பட்டு, புதிய தோலால் சீரமைக்கப்பட்டது.

அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து, லியின் மண்டைப் பகுதி தற்போது முற்றிலும் இயல்பான தோற்றத்திற்குத் திரும்பியுள்ளது.

மேலும், அந்தப் பகுதியில் மீண்டும் இயல்பாக முடி வளரத் தொடங்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆண்டுக் கணக்கில் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் வேதனையை சந்தித்து வந்த அந்த இளைஞருக்கு இந்தச் சிகிச்சை ஒரு புதிய வாழ்க்கையை அளித்துள்ளது.

ADVERTISEMENT