Page Loader
உலக வரைபடத்தில் இருந்து இஸ்ரேலை நீக்கிய சீன நிறுவனங்கள் 
இஸ்ரேல் போர் தொடங்கியதில் இருந்து சீன இணையத்தில் யூத விரோதம் அதிகமாக பரவி வருகிறது.

உலக வரைபடத்தில் இருந்து இஸ்ரேலை நீக்கிய சீன நிறுவனங்கள் 

எழுதியவர் Sindhuja SM
Oct 31, 2023
12:54 pm

செய்தி முன்னோட்டம்

சிறந்த சீன தொழில்நுட்ப நிறுவனங்களான அலிபாபா மற்றும் பைடு ஆகியவை ஆன்லைனில் கிடைக்கும் டிஜிட்டல் உலக வரைபடங்களில் இருந்து இஸ்ரேலின் அதிகாரப்பூர்வ பெயரை நீக்கியுள்ளன. யூத நாடான இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன-ஹமாஸ் அமைப்புக்கும் இடையே போர் நடந்து வரும் நிலையில், சீன இணையம் முழுவதும் யூத விரோதத்தால் மூழ்கடிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து, உலக வரைபடத்தில் இருந்து 'இஸ்ரேல்' என்ற பெயரை முக்கிய சீன நிறுவனங்கள் நீக்கியுள்ளன. பைடு நிறுவனத்தால் வழங்கப்படும் சீன மொழி கிடைக்கும் ஆன்லைன் வரைபடங்களில் இஸ்ரேலின் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகள், பாலஸ்தீனியப் பகுதிகள், முக்கிய நகரங்களின் பெயர்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. ஆனால் இஸ்ரேல் நாட்டின் பெயர் மட்டும் நீக்கப்பட்டுள்ளது.

டவ்ன்

சீன இணையத்தில் பரவும் யூத விரோதம்

லக்சம்பர்க் போன்ற சிறிய நாடுகளின் பெயர்கள் கூட அந்த வரைபடங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், இஸ்ரேலின் பெயர் மட்டும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த நடவடிக்கைக்கு சீன நிறுவனங்கள் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இஸ்ரேல் போர் தொடங்கியதில் இருந்து சீன இணையத்தில் யூத விரோதம் அதிகமாக பரவி வருகிறது. ஏற்கனவே, அமெரிக்கா யூதர்களால் நிறுவப்பட்ட ஒரு நாடு என்றும், அதனால் அமெரிக்க அரசியலில் இஸ்ரேலின் பங்கு அதிகம் என்றும் பல கருத்துக்கள் சீன இணையவாசிகளுக்கு மத்தியில் பிரபலமாகி கொண்டிருக்கின்றன. மேலும், பாலஸ்தீனயர்களுக்கு ஆதரவான கருத்தும் அதிகரித்து வருகிறது.

ட்விட்டர் அஞ்சல்

 'இஸ்ரேல்' என்ற பெயரை நீக்கிய நிறுவனங்கள்