மீண்டும் பேரழிவை மேற்கொள்ளும் சீனா - மீண்டும் துவங்கிய கொரோனாவின் கோரத்தாண்டவம்
உலகம் முழுக்க கொரோனா பாதிப்பு 2019ம் ஆண்டு இறுதி துவங்கி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. பெரும் உயிர் சேதங்களை ஏற்படுத்திய இந்த தொற்று சமீப காலமாக சற்று குறைய துவங்கியது. இந்நிலையில் தற்போது மீண்டும் உருமாறிய பிஎப்7 என்னும் கொரோனா வைரஸ் சீனாவில் பெருமளவில் பரவ துவங்கியுள்ளது. உலக நாடுகளிலும் பரவ துவங்கியுள்ள இந்த வைரஸ், சீனாவில் எதிர்பாராத விதத்தில் வேகமாக பரவி இறப்பு விகிதங்களை அதிகப்படுத்தி வருகிறது. மருத்துவமனையில் படுக்கை வசதிகளுக்கு தட்டுப்பாடு வந்துள்ள நிலையில், மாத்திரை, மருந்துகளுக்கு, குறிப்பாக காய்ச்சல் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் இந்தியா மனிதாபிமான அடிப்படையில் மருந்துகளை சீனாவிற்கு ஏற்றுமதி செய்வதாக முன்வந்தது.
இந்திய மருந்துகளை கள்ள சந்தையில் வாங்கும் சீனர்கள்
எனினும், டெல்லியில் உள்ள சீன தூதரகம் இது குறித்து எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. இந்நிலையில் சீன அரசு இந்திய மருந்துகளை அங்கீகரிக்காத நிலையில், அவற்றை உபயோகிப்பது சட்டப்படி குற்றம் என்றும் அறிவித்தது. எனினும், பொதுவான கொரோனா தடுப்பு இந்திய மருந்துகளை சீனாவில் வசிப்போர் கள்ள சந்தையில் வாங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பெரும் தொற்று காரணமாக சீனாவில் கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடே இதற்கு காரணம் ஆகும். சீனாவில் இந்தாண்டு பைசர்ஸ் பாக்ஸ்லோவிட் மற்றும் அஸ்வுடின் என்னும் இரண்டு கொரோனா தடுப்பு மருந்துகளை சீன நிறுவனமான பயோடெக் நிறுவனம் தயாரித்து, சீனாவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த மருந்துகள் சில மருத்துவமனைகளில் மட்டுமே கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.