இனி விசா இல்லாமலேயே சீனா போகலாம்! பிரிட்டன், கனடா குடிமக்களுக்கு சீனா கொடுத்த இன்ப அதிர்ச்சி
செய்தி முன்னோட்டம்
சுற்றுலா மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்தும் நோக்கில், ஐக்கிய இராச்சியம் (UK) மற்றும் கனடா நாட்டு குடிமக்களுக்கு விசா இல்லாத நுழைவு அனுமதியை சீனா அறிவித்துள்ளது. இந்த புதிய தளர்வு இன்று முதல் (பிப்ரவரி 17, 2026, செவ்வாய்க்கிழமை) அமலுக்கு வருகிறது. அறிவிப்பின்படி சாதாரண பாஸ்போர்ட் வைத்துள்ள பிரிட்டன் மற்றும் கனடா குடிமக்கள், விசா இன்றி சீனாவில் 30 நாட்கள் வரை தங்கி இருக்கலாம். இதன் மூலம் சீனாவிற்கு விசா இன்றி செல்ல அனுமதி பெற்ற நாடுகளின் எண்ணிக்கை 79-ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்கா மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள், தங்களது பயணத்தின் இடையே சீனாவை ஒரு போக்குவரத்து முனையாக பயன்படுத்தினால் 10 நாட்கள் வரை தங்குவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது.
முக்கிய அம்சங்கள்
அறிவிப்பின் முக்கிய அம்சங்கள்
அறிவிப்பின்படி சாதாரண பாஸ்போர்ட் வைத்துள்ள பிரிட்டன் மற்றும் கனடா குடிமக்கள், விசா இன்றி சீனாவில் 30 நாட்கள் வரை தங்கி இருக்கலாம். இந்த அறிவிப்பின்படி, வணிகம், சுற்றுலா, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களைச் சந்தித்தல், கல்விப் பரிமாற்றத் திட்டங்கள் மற்றும் Transit ஆகிய காரணங்களுக்காக பயணம் மேற்கொள்ளும் பிரிட்டன் மற்றும் கனடா நாடு பிரஜைகளுக்கு இது பொருந்தும். இந்த விசா விலக்கு சலுகை இன்று முதல் டிசம்பர் 31, 2026 வரை அமலில் இருக்கும் என சீன அரசு அறிவித்துள்ளது. கடந்த மாதம் பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் மற்றும் கனடா பிரதமர் மார்க் கார்னி ஆகியோர் சீனாவுக்கு மேற்கொண்ட பயணத்தின் தொடர்ச்சியாக இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.