Loading...
100க்கும் மேற்பட்டோர் பரிதாப பலி! தங்கச் சுரங்கம் சரிந்து விழுந்து ஏற்பட்ட கோர விபத்து
மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் தங்கச் சுரங்கம் சரிந்து விபத்து

100க்கும் மேற்பட்டோர் பரிதாப பலி! தங்கச் சுரங்கம் சரிந்து விழுந்து ஏற்பட்ட கோர விபத்து

எழுதியவர் Sekar Chinnappan
Aug 20, 2026
12:00 pm

செய்தி முன்னோட்டம்

மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் மேற்குப் பகுதியில் உள்ள பாரம்பரிய தங்கச் சுரங்கம் ஒன்று எதிர்பாராதவிதமாக இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. கேமரூன் எல்லைக்கு அருகில் உள்ள நானா-மாம்பேரே மாகாணத்தில் அமைந்துள்ள ஜாம்போய் கிராமத்தில் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. விபத்து நடந்த இடத்தில் செஞ்சிலுவை சங்கத் தன்னார்வலர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் இணைந்து மீட்புப் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழப்பு

உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அச்சம்

சுரங்க இடிபாடுகளுக்குள் இன்னும் பலர் சிக்கியிருப்பதாகவும், பலரைக் காணவில்லை என்றும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

விபத்தில் சிக்கி மீட்கப்பட்ட பலர் பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடி வருகின்றனர்.

வறுமை காரணமாகத் தங்களது குடும்பங்களைக் காப்பாற்ற வந்த இளம் ஆண்களும் பெண்களும் இத்தகைய கொடூரமான விபத்தில் உயிரிழந்திருப்பது அப்பகுதி மக்களிடையே மிகப்பெரிய சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

பாதுகாப்பின்மை

பாதுகாப்புச் சாதனங்கள் இன்றி நடைபெறும் கைவினை சுரங்கப் பணிகள்

மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் முறையான பாதுகாப்பு வசதிகள் மற்றும் நவீன தொழில்நுட்ப கருவிகள் எதுவுமின்றி, பாரம்பரிய முறையில் இயங்கும் சிறு அளவிலான தங்கச் சுரங்கங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் பணியாற்றி வருகின்றனர்.

தகுந்த பாதுகாப்புச் சாதனங்கள் இல்லாத காரணத்தினால், இத்தகைய ஆபத்தான முறையில் செயல்படும் சுரங்கங்களில் இதுபோன்ற கோர விபத்துகள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன.

இந்த விபத்தின் போதும் தொழிலாளர்கள் சேற்றில் மூழ்கியபடி உடல்களை மீட்கும் காட்சிகள் வெளியாகி நெஞ்சை உருக்கும் வகையில் அமைந்துள்ளன.

ADVERTISEMENT

விசாரணை

விசாரணைக்கு உத்தரவிட்ட உள்ளூர் நீதிமன்ற அரசு வழக்கறிஞர்

இந்த சுரங்க விபத்துக்கான உண்மையான காரணத்தைக் கண்டறியவும், விபத்தில் உயிரிழந்தவர்களை முறையாக அடையாளம் காணவும் அதிகாரப்பூர்வ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பாபுவா துணைப் பிராந்திய நீதிமன்றத்தின் அரசு வழக்கறிஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த சுரங்கத்தை சட்டவிரோதமாக நடத்தி வந்த நபர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

விபத்து நடந்த இடத்தில் மீட்புக் குழுவினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

மீட்புப் பணி

மீட்புப் பணிகளில் தொடரும் சவால்கள் மற்றும் மக்களின் சோகம்

இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை உயிரோடு மீட்பது மிகவும் கடினமான ஒன்று என உள்ளூர் இளைஞர் நல சங்கப் பிரதிநிதிகள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.

போதிய உபகரணங்கள் இல்லாத நிலையிலும் உள்ளூர் மக்கள் மற்றும் மீட்புக் குழுவினர் இடிபாடுகளை அகற்றி உடல்களை மீட்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இச்சம்பவம் மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் உள்ள சுரங்கத் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் வாழ்வாதாரக் கேள்விகளை மீண்டும் சர்வதேச அளவில் எழுப்பியுள்ளது.

ADVERTISEMENT