Loading...
சியாட்டில் உணவுத் திருவிழாவில் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொதுமக்கள் பீதி
சியாட்டில் உணவுத் திருவிழாவில் துப்பாக்கிச் சூடு

சியாட்டில் உணவுத் திருவிழாவில் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொதுமக்கள் பீதி

எழுதியவர் Venkatalakshmi V
Jul 27, 2026
09:07 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள சியாட்டில் நகரில் நடைபெற்ற புகழ்பெற்ற உணவுத் திருவிழாவில் திடீரென நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம், அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களை மரண பீதியில் ஆழ்த்தியுள்ளது. சியாட்டில் சென்டர் வளாகத்தில் ஆண்டின் பாரம்பரியமிக்க 'பைட் ஆஃப் சியாட்டில்' உணவு மற்றும் பானங்கள் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. அப்போது ஹாரிசன் தெரு அருகே எதிர்பாராத விதமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் பலர் காயமடைந்ததைத் தொடர்ந்து, மக்கள் அனைவரும் அப்பகுதிக்கு வருவதைத் தவிர்க்குமாறு சியாட்டில் நகரக் காவல்துறை உடனடியாக எச்சரிக்கை விடுத்தது.

பதற்றம்

நேரில் கண்ட சாட்சிகளின் பதற்றமான அனுபவங்கள்

துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டவுடன் திருவிழாவில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அலறியடித்தபடி நாலாபுறமும் சிதறி ஓடினர்.

"தொடர்ச்சியான வெடிப்புச் சத்தமும் மக்களின் அலறல் சத்தமுமே கேட்டது" என நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

சமூக வலைத்தளங்களில் வெளியான வீடியோக்களில், அவசரக்கால வாகனங்கள் சூழ்ந்திருக்க, மக்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடும் பதற்றமான காட்சிகள் பதிவாகியுள்ளன.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர்கள் உடனடி முதலுதவிக்குப் பிறகு ஹார்பர்வியூ மருத்துவ மையத்திற்குக் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டனர்.

அசம்பாவிதத்தைத் தொடர்ந்து, பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சியாட்டில் மோனோரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை முழுவதும் நிறுத்தப்பட்டு, திங்கள்கிழமை காலை வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT