நாஜி வதை முகாம்களுக்கு தனது வம்சாவளியினரை அழைத்து சென்ற அமெரிக்கா அதிபர் பைடன்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தனது மகன்கள் மற்றும் பேரப்பிள்ளைகள் 14 வயதை அடையும் போது, டாச்சுவில் உள்ள நாஜிகளின் வதை முகாமுக்கு அழைத்துச் சென்றதாக கூறியுள்ளார். அமெரிக்க வெள்ளை மாளிகையில் யூத எதிர்ப்புக்கு எதிரான செயல் திட்டங்களை வகுக்கும் நிகழ்ச்சியில், அமெரிக்க அதிபர் பைடன் பங்கேற்றார். அங்கு கூடியிருந்த யூத மத தலைவர்கள் மத்தியில் பேசிய பைடன், ஹோலோகாஸ்டின் கொடுமைகள் குறித்து தனது வம்சாவளியினர் தெரிந்து கொள்வதற்காகவே இவ்வாறு செய்வதாக கூறினார். மேலும் ஹோலோகாஸ்டின் கொடுமைகள் அவர்களுள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் பேசினார். ஹமாஸ் ஆயுதக்குழு நடத்தும் தாக்குதலில், இஸ்ரேலில் உள்ள யூத மக்கள் கொல்லப்படுவதை சுட்டிக்காட்டியே, அதிபர் நாஜி காலத்து வதை முகாம்களை நினைவு கூர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வு யூதர்களுக்கு ஹாலோ கேஸ்ட்- அதிபர் பைடன்
அந்நிகழ்ச்சியில் தொடர்ந்து பேசியவர், "இந்நிகழ்வு யூதர்களுக்கும், ஹோலோகாஸ்ட்கும் மோசமான நாள். மனித வரலாற்றிலேயே மிகவும் மோசமான பக்கமான இது, என் தந்தையிடம் நான் கற்றுக்கொண்ட ஒரு சொற்தொடரை ஞாபகப்படுத்துகிறது." "மௌனமாக இருப்பது தவறுக்கு உடந்தையாக இருப்பதாகும். அதனால் தான் நான் மௌனமாக இருக்க மறுக்கிறேன்" என்றார். பின்னர் சத்தமாக மற்றும் உணர்ச்சிவசத்துடன் பேசிய பைடன், "அதனால் தான் என் பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளை டாச்சுக்கு அழைத்துச் செல்கிறேன். சிலர் 14 வயது குழந்தைகளை அங்கு அழைத்துச் செல்வதில் பயனில்லை என நினைத்தார்கள்". "ஆனால் அது அவர்களிடம் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. நான் இன்னும் மூன்று பேரப்பிள்ளைகளை அழைத்துச் செல்ல இருக்கிறேன். அது மிகவும் முக்கியம்" என அவர் பேசி முடித்தார்.