Page Loader
'டொனால்ட் டிரம்ப் இரங்கல் தெரிவிக்கவில்லை': டிரம்பின் பேரணியில் பலியானவரின் மனைவி தகவல் 

'டொனால்ட் டிரம்ப் இரங்கல் தெரிவிக்கவில்லை': டிரம்பின் பேரணியில் பலியானவரின் மனைவி தகவல் 

எழுதியவர் Sindhuja SM
Jul 16, 2024
11:58 am

செய்தி முன்னோட்டம்

முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீதான படுகொலை முயற்சியின் போது கோரே கம்பேரேடோர் என்பவர் கொல்லப்பட்டார். இந்நிலையில், அது குறித்து பேசியிருக்கும் அவரது மனைவி, டிரம்ப்பிடமிருந்து தனக்கு இரங்கல் அழைப்பு வரவில்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் ஜோ பைடனிடம் இருந்து தனக்கு அழைப்பு வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். 50 வயதான தன்னார்வ தீயணைப்பு வீரரும் இரண்டு பிள்ளைகளின் தந்தையுமான கோரி கம்பேரடோர், பென்சில்வேனியாவில் டிரம்பை குறிவைத்து நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார். இந்நிலையில், ஜோ பைடனின் அழைப்பை நிராகரித்தாக அவரது மனைவி தெரிவித்துள்ளார். ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பைடனுடன் உரையாடி இருந்தால் அது தனது கணவருக்கு பிடிக்காது என்று மேலும் கூறியுள்ளார்.

அமெரிக்கா 

"பைடன் மீது தனக்கு எந்த விரோதமும் இல்லை":  ஹெலன் 

"நான் பைடனுடன் பேசவில்லை," என்று ஹெலன் கொம்பரேடோர் தெரிவித்துள்ளார். "நான் பைடனுடன் பேச விரும்பவில்லை. என் கணவர் ஒரு பக்தியுள்ள குடியரசுக் கட்சிக்காரர். நான் பைடனுடன் பேசுவதை அவர் விரும்பியிருக்க மாட்டார்." என்று அவர் கூறியுள்ளார். தன் கணவரை ஒரு ஹீரோ என்று வர்ணித்த ஹெலன் கொம்பரேடோர், தன்னையும் தனது இரண்டு குழந்தைகளையும் துப்பாக்கி சூட்டில் இருந்த காக்க அவர் தன் உயிரை பணயம் வைத்தார் என்று கூறியுள்ளார். மேலும், பைடன் மீது தனக்கு எந்த விரோதமும் இல்லை என்று கூறிய ஹெலன், டிரம்பின் பேரணியில் துப்பாக்கி சூடு நடத்திய தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் மீது தான் தனக்கு கோபம் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.