Loading...
எழுத்துலகில் சோகம்! புகழ்பெற்ற நாவலாசிரியர் ஜெஃப்ரி ஆர்ச்சர் திடீர் மறைவு
ஜெஃப்ரி ஆர்ச்சர் தனது 86-வது வயதில் காலமானார்

எழுத்துலகில் சோகம்! புகழ்பெற்ற நாவலாசிரியர் ஜெஃப்ரி ஆர்ச்சர் திடீர் மறைவு

எழுதியவர் Venkatalakshmi V
Oct 06, 2026
09:24 am

செய்தி முன்னோட்டம்

உலகப் புகழ்பெற்ற நாவலாசிரியரும், இங்கிலாந்தின் முன்னாள் அரசியல்வாதியுமான ஜெஃப்ரி ஆர்ச்சர் தனது 86-வது வயதில் காலமானார். அவரது மறைவை உறுதி செய்த பதிப்பகமான ஹார்பர்காலின்ஸ், அவர் திங்கள்கிழமை (அக்டோபர் 5) தனது இல்லத்தில் அமைதியான முறையில் இயற்கை எய்தினார் எனத் தெரிவித்துள்ளது. 1940 ஏப்ரல் 15 அன்று லண்டனில் பிறந்த ஜெஃப்ரி ஆர்ச்சர், தனது 50 ஆண்டு கால எழுத்து வாழ்க்கையில் 30 கோடிக்கும் அதிகமான புத்தகங்களை விற்பனை செய்து உலக சாதனை படைத்தவர் ஆவார்.

எழுத்துப் பயணம்

புகழ்பெற்ற படைப்புகள்

'Kane and Abel', 'The Clifton Chronicles', 'Not a Penny More, Not a Penny Less' போன்றவை இவரது காலத்தால் அழியாத படைப்புகளாகும்.

இவரது இறுதி நாவலான 'Adam and Eve' இந்த வாரம் வெளியாகவுள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை வரை லண்டனில் நடைபெற்ற புத்தக கையொப்ப நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது படைப்பை ஆர்வத்துடன் விளம்பரப்படுத்தி வந்தார்.

அரசியல்

அரசியல் வாழ்க்கையும் சர்ச்சைகளும்

1969-இல் கன்சர்வேடிவ் கட்சி சார்பில் எம்.பி-யாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்ச்சர், அக்கட்சியின் துணைத் தலைவராகவும் பதவி வகித்தார்.

எனினும், 2001-இல் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் பொய் சாட்சியம் அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டு சிறை சென்றார்.

2003-இல் சிறையிலிருந்து விடுதலையான அவர், 2024-இல் ஓய்வு பெறும் வரை இங்கிலாந்தின் மேலவையான House of Lords உறுப்பினராகத் தொடர்ந்தார்.

ஆர்ச்சரின் மறைவுக்கு கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் கெமி பாடெனோக், ஹார்பர்காலின்ஸ் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி கேட் எல்டன் உள்ளிட்ட பலர் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT