LOADING...
பலுசிஸ்தானில் சீன ராணுவம்? - இந்தியாவிற்கு பெரும் ஆபத்து என பலுச் தலைவர் எச்சரிக்கை
இந்தியாவிற்கு பெரும் ஆபத்து என பலுச் தலைவர் எச்சரிக்கை

பலுசிஸ்தானில் சீன ராணுவம்? - இந்தியாவிற்கு பெரும் ஆபத்து என பலுச் தலைவர் எச்சரிக்கை

எழுதியவர் Venkatalakshmi V
Jan 02, 2026
05:24 pm

செய்தி முன்னோட்டம்

பலுசிஸ்தான் பகுதியில் இன்னும் சில மாதங்களில் சீனா தனது ராணுவ படைகளை களம் இறக்க வாய்ப்புள்ளதாகவும், இது இந்தியாவிற்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்றும் பலுச் தலைவர் மிர் யார் பலுச் எச்சரித்துள்ளார். பலுசிஸ்தான் குடியரசின் பிரதிநிதியான மிர் யார் பலுச், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்..ஜெய்சங்கருக்கு ஜனவரி 1 அன்று ஒரு அவசர கடிதம் எழுதியுள்ளார். பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதையும், பலுச் சுதந்திர படைகளை ஒடுக்க சீனா தனது ராணுவத்தை அனுப்ப திட்டமிட்டுள்ளதையும் அந்தக் கடிதத்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பலுசிஸ்தான் மண்ணில் சீன ராணுவ வீரர்களின் கால்தடங்கள் பதிவது, பலுச் மக்களுக்கும் இந்தியாவிற்கும் கற்பனை செய்ய முடியாத ஆபத்துகளை விளைவிக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

அம்சங்கள்

முக்கிய அம்சங்கள்

சீனா-பாகிஸ்தான் பொருளாதார மண்டலத் திட்டம் (CPEC) இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சீனாவின் தலையீடு அதிகரித்துள்ளது. இந்தியாவிற்கும் பலுசிஸ்தானுக்கும் இடையே பல நூற்றாண்டுகால கலாச்சார மற்றும் வரலாற்று உறவுகள் இருப்பதை நினைவு கூர்ந்த அவர், இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். பலுசிஸ்தானில் உள்ள புகழ்பெற்ற ஹிங்லாஜ் மாதா கோவிலை இரு நாடுகளின் பொதுவான பாரம்பரிய சின்னமாக அவர் குறிப்பிட்டுள்ளார் என இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

Advertisement