அஸ்ட்ராஜெனெகா உலகளவில் கோவிட் தடுப்பூசியை திரும்பப் பெறப்போவதாக தகவல்
மருந்து தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராஜெனெகாவின் கோவிட்-19 தடுப்பூசி, அரிதான மற்றும் ஆபத்தான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்று நீதிமன்ற ஆவணங்களில் நிறுவனம் ஒப்புக்கொண்டதை அடுத்து, உலகளவில் அதன் தடுப்பூசிகள் திரும்பப் பெறப்படுகிறது. இருப்பினும், வணிக காரணங்களுக்காகவே இந்த தடுப்பூசி, சந்தைகளில் இருந்து அகற்றப்படுவதாக மருந்து நிறுவனமான நிறுவனம் தெரிவித்துள்ளது. தடுப்பூசி இனி தயாரிக்கப்படுவதில்லை அல்லது வழங்கப்படுவதில்லை என்று நிறுவனம் கூறியது,என டெலிகிராப் செவ்வாயன்று கூறியது. இந்த முடிவை "முற்றிலும் தற்செயலானது" என்று அழைக்கும் மருந்து நிறுவனம், தடுப்பூசி திரும்பப் பெறும் நடவடிக்கை, TTS - த்ரோம்போசிஸ் த்ரோம்போசைட்டோபீனியா நோய்க்குறியை ஏற்படுத்தும் என கூறியதனால் அல்ல என்று வலியுறுத்தியுள்ளது.
ஐரோப்பாவில் ரத்து செய்யப்படும் அங்கீகாரம்
நிறுவனம் தானாக முன்வந்து அதன் "சந்தைப்படுத்தல் அங்கீகாரத்தை" திரும்பப் பெற்றதால், தடுப்பூசி இனி ஐரோப்பிய ஒன்றியத்தில் பயன்படுத்த அங்கீகரிக்கப்பட போவதில்லை எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன. திரும்பப் பெறுவதற்கான விண்ணப்பம் மார்ச் 5 அன்று சமர்ப்பிக்கப்பட்டு செவ்வாய்கிழமை அமலுக்கு வந்தது. முன்னதாக, வாக்ஸெவ்ரியா எனப்படும் தடுப்பூசிக்கும், ஒப்புதல் அளித்த இங்கிலாந்து மற்றும் பிற நாடுகளிலும் இதே போன்ற திரும்பப் பெற விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படும். இரத்த உறைவு மற்றும் குறைந்த இரத்த பிளேட்லெட் எண்ணிக்கையை ஏற்படுத்தும் அரிதான பக்க விளைவு காரணமாக Vaxzevria தடுப்பூசி உலகளாவிய ஆய்வுக்கு உட்பட்டது. அந்த வகையில்தான், கடந்த பிப்ரவரியில் UK உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில், அஸ்ட்ராஜெனெகாவின் கோவிட் தடுப்பூசி "மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில், TTS-ஐ ஏற்படுத்தும்" என்று ஒப்புக்கொண்டது.