
இஸ்ரேல் தாக்குதலில் கிட்டத்தட்ட 50 பணயக்கைதிகள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அறிக்கை
செய்தி முன்னோட்டம்
பாலஸ்தீனப் பகுதி மீது, இஸ்ரேல் குண்டுவீசத் தொடங்கியதில் இருந்து, காசா பகுதியில், ஹமாஸ் தீவிரவாதிகளால் பணய கைதிகளாக பிடிக்கப்பட்ட கிட்டத்தட்ட 50 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக, ஹமாஸின் ஆயுதப் பிரிவு தெரிவித்துள்ளது.
"(Ezzedine) அல்-கஸ்ஸாம் படைப்பிரிவுகள், சியோனிச தாக்குதல்கள் மற்றும் படுகொலைகளின் விளைவாக, காசா பகுதியில் கொல்லப்பட்ட சியோனிஸ்ட் கைதிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 50ஐ எட்டியுள்ளதாக மதிப்பிடுகிறது" என்று ஹமாஸ் குழு தனது டெலிகிராம் சேனலில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த மாதம், அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் கொடூரமான தாக்குதலை நடத்தியதைத் தொடர்ந்து, இஸ்ரேல் காஸா மீது வான் மற்றும் பீரங்கி குண்டுத் தாக்குதலை நடத்தி வருகிறது.
இந்த தாக்குதலில், ஹமாஸின் துணை தலைவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
50 பணயக்கைதிகள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அறிக்கை
#UPDATE Hamas's armed wing says 'almost 50' Israeli hostages have been killed 'as a result' of Israeli strikes in Gaza. AFP has not been immediately able to verify the claim. pic.twitter.com/7dndH7ICG5
— AFP News Agency (@AFP) October 26, 2023